இனி பெட்ரோல் தேவையில்லை!! சூரிய மின்சக்தியில் இயங்கும் விமானம் வெற்றிகர சோதனை ஓட்டம்


       முற்றிலும் சூரிய மின்சக்தியான சோலார்  எனர்ஜியில் இயங்கக்கூடிய விமனம், வெற்றிகரமாக அமெரிக்க நாசா ஆய்வில் தனது சோதனை ஓட்டத்தை நடத்தியுள்ளது.     சோலார் இம்பல்ஸ் வானவெளியில் தொழில்நுட்ப சாகசத்தை கிட்டத்தட்ட 17 மணி நேரம் பறந்து, செய்துகாட்டியது.

.com @ Rs.599

இதன் இறக்கைகளில் சோலார் கதிர்களை உள்வாங்கி,  அதை மின்சக்தியாக மாற்றக்கூடிய சோலார் தகடுகள்  பொறுத்தப்பட்டிருக்கும் இந்த விமானம் பறந்துகொண்டிருக்கும் போதே ஆற்றலை உள்வாங்கி சேமித்துக்கொள்ளும் என்பதால் விமானம் இயங்க, பெட்ரோலுக்கான தேவை என்பது மிக குறைவாகவே இருக்கும். 


   "சுத்தமான தலைமுறைகள்" எனும் வாசகத்தை முன்னிருத்தி விமானஓட்டிகள்  இந்த ஓட்டத்தை மேற்கொண்டனர். பெரும்பாலும் இந்த சோலார் விமானம் வின்வெளியில் ஏற்படும் பெரும்பாலான மாசினை கட்டுப்படுத்தும் என்று ஆய்வாளர்கள் பெரிதும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதிக அளவில் பருவ நிலை மாற்றங்கள் இருப்பினும் இதன் சோலார் செல்கள் வெகு நேரம்  மின்சக்தியை சேமித்து வைத்திருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. 

வரும் 2015 க்குள் பயணிகளுடன் சோலார் விமானங்கள் அதிக  அளவில் பறந்து கொண்டிருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் தேவை  இல்லை.


     ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்பும் அதை பயன்பாட்டிற்கு கொண்டு வருகையில் மட்டுமே முழுமையான அங்கீகாரம் பெறும்.. அந்த வகையில் சூரிய ஒளியை கொண்டு இயங்கும் சோலார் விமானங்கள் சோதனை ஓட்டத்திலேயே பெரும் வரவேற்பை பெற்றிருக்கின்றன.

Comments