ஆகஸ்ட் 30ல் புறப்பட தயாராகிவிட்டான் எந்திரன் 2உலகின் அதிநவின பேசும் ரோபோவான கிரோபொ-வை வின்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளனர் ஜப்பானிய விஞ்ஞானிகள்.


        ஜப்பான் நாட்டு ரோபோன்னா சும்மாவா..?? இந்த எந்திரன் பெயர் கிரோபொ.  இவனுக்கு பேசவும் தெரியும். உலகின் முதல் பேசும் ரோபோவாக கிரோபொ வடிவமைக்கப்பட்டுள்ளது..com @ Rs.599


     34 சென்டிமீட்டர் உயரமும், ஒரு  கிலோ எடையுமாய் மிகவும் அழகாக இந்த பேசும் ரோபோவை விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்.  மேலும் விண்வெளியின் பூஜ்ஜிய புவியீர்ப்பு விசைக்கு ஏதுவாக இவன் ஏற்கனவே சோதனையில் வெற்றிகரமாக நடந்துள்ளான். இதானால்  உலகின் முதல் பேசும் ரோபோ விண்வெளிக்கு  செல்வதில் எந்த தடையும் இல்லை என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஜப்பானின் தென்மேற்கு எல்லையில் ககோஷிமா மாகாணத்தில், விண்வெளி ஆராய்ச்சி மையான டனாகிமாவில் இருந்து  எந்திரன் கிரோபோ, விண்கலம் மூலமாக விண்வேளிக்கு செல்ல இருக்கிறான்.


Comments