உற்பத்தி தொழிலை துவங்க இருக்கின்றீர்களா? ஒருநிமிடம் பொறுங்கள்

நண்பர்களுக்கு வணக்கம்!! 

தொழிற்களம் மூலமாக பதிவுலகில் நான் உள்ளே வந்தது முதற்கொண்டே அதிகமான நண்பர்களின் தொழில்சார்ந்த ஆர்வங்களுக்கு முடிந்த விவரங்களை தருவது எனக்கு மகிழ்வான வாடிக்கையாகிவிட்டது.

இதில், இன்னும் நிறைய நண்பர்களின் எதிர்ப்பார்ப்பை பொறுத்த வரையில், அவர்கள் செய்தித்தாள் அல்லது செவிவழி விளம்பரங்களில் சிக்கி, உடனடியாக தாங்கள் அந்த தொழிலை முயற்சிக்க வேண்டும், அதிக வருமானத்தை எளிதாக அடையாலாம் என்பதாகவே இருக்கிறது.

நன்றாக புரிந்துகொள்ளுங்கள்.

நாளைந்து இணையப் பக்கங்களில் தகவல்களை வாசித்து, பத்து பேரை கேட்டு துவங்குவது சரியான தொழில் முறை அல்ல. ஒன்றூ நீங்கள் அந்த தொழிலில் பணிபுரிந்திருக்க வேண்டும் அல்லது மிக நெருங்கிய தொடர்பில் அந்த தொழில் நடத்துபவர்களிடம் இருந்து கற்றுக்கொண்டு இருக்க வேண்டும், இவையடுத்து வாசிப்பனுபத்தை கொண்டு உங்கள் முதலீடை தீர்மானித்தீர்களேயானால் நிச்சயம் கையை சுட்டுக்கொள்ளும் சந்தர்ப்பம் அதிகமாக உண்டு.


உதாரணமாக நிறைய பேர் கேட்கும் தொழில் மெழுகு உற்பத்தி, டேட்டா என்ட்ரி, பாக்குமட்டை மட்டை, பேப்பர் கப் தயாரிப்பு போன்றவைகள் தான்.

இதில் உற்பத்தி சார்ந்த தொழில்கள் எனில், முதலில் உற்பத்தியின் மூலக்கூறுகளின் மையங்களை தெரிந்துகொள்ள வேண்டும். ( விரிவாக இதை மற்றொரு பதிவிலிடுகிறேன் ).


முக்கியமாக உங்கள் உற்பத்தி விரைவில் நடந்துவிடும்,. விற்பனை..?

ஆக, உற்பத்தி தொழிலை துவங்கும் முன், முதலில் ஏற்கனவே அந்த தொழிலில் அனுபவம் வாய்ந்தவர்களிடம் சென்று மொத்த விலைக்கு வாங்கி அதை சந்தை படுத்துங்கள் ( மார்க்கெட் செய்யுங்கள் ). இந்த விற்பனையின்  போது  வாடிக்கையாளர்களின் தேவைகளை முழுமையாக தெரிந்துகொள்ள முடியும். பிறகு நீங்களே உற்பத்தியை துவங்கும் பொழுது அனாவசிய விரயங்கலை தவித்துக்கொள்ளல்லம். 

இருவரி பின்னூட்டமாகவே இதை துங்கினேன். ஒரு பதிவாகிவிட்டது. விரைவில் தெளிவாக பதிவிடுகிறென்.

- தொழிற்களம் அருணேஸ்.

Comments