முதலாம் தலைமுறை தொழில்முனைவோரா நீங்கள்..?

முதலாம் தலைமுறை தொழில்முனைவோரா நீங்கள். ..?

உங்கள் வியாபாரத்தில் நீங்கள் வெற்றி பெற அடுத்தவரிடம் ஆலோசனை கேட்காதீர்கள்!!! 

அப்படி கேட்பதானால், உங்கள் வியாபாரத்தை விட உங்களைப் பற்றிய குறிப்புகளைத் தான் நீங்கள் அதிகம் சொல்ல வேண்டியிருக்கும். உங்கள் குணம், பலம், பலவீனம் அறியாமல் சொல்லப்படும் ஆலோசனை உங்கள் நேரத்தை மட்டுமல்ல, ஆலோசனை சொல்பரின் நேரத்தையும் சேர்த்தே வீணடிக்கும்...

என்ற எனது நிலைத்தகவலுக்கு நண்பர் ஒருவர் பின்னூட்டத்தில் /// நமக்கு தெரியாத விஷயங்களை சரியான நபரிடம் கேட்டு தெரிந்து கொள்வது தவறா? /// என்று கேட்டிருந்தார்.

அவருக்கான பதில் உங்களுக்கும் பயன்படலாம் என்ற எண்ணத்தில்,,,

// ஒரு நல்ல ஆசோனையை வழங்கும் சக்தி அனைவரிடமும் இருந்து விடாது.

நீங்கள் காது கொடுத்தும் கேட்கும் பலமணி நேர விளக்கங்களை, நமது ஆழ்மனதில் பதிந்திடும் கனநேர ஒற்றை பயம் பாசிட்டிவ் எண்ணத்தை முன்னுக்கு தள்ளி உங்கள் வியாபரத்தை குறித்த அதிக சந்தேகங்களை பயங்களாக மாற்றிவிடும். 

அதிலும் குறிப்பாக உங்களது பின்புலம் அறியாது, குறித்துத் தரப்படும் தகவல்களால் உங்களுக்கென்ற எந்த ஒரு பயனும் கிடைத்திடாமலேயே போய்விடும் அபாயம் தான் மிஞ்சும்.

ஆலோசனை கேட்பது என்பது வேறு,, தெரியாத தகவல்களை சேகரித்து பெறுவது என்பது வேறு...

வாட்டர் கேன் சப்ளை செய்ய விரும்பும் ஒருவர், தான் அந்த வேலையை செய்யலாமா? லாபம் வருமா? என்று ஒருவரிடம் கேட்பதற்கும்... அதே நபரிடம் வாட்டர் கேன் ஒன்றிற்கு உற்பத்தி செலவு எவ்வளவு ஆகும் என்று கேட்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

உங்கள் வளர்ப்பு பின்னணி குறித்து சரியான தகவல்களை அளிக்காமல் அல்லது அது பற்றி தெரிந்துகொள்ள விரும்பாமல் உள்ள நபர்களிடம் ஆலோசனையை கேட்காதீர்கள் என்பதையே மேற்கண்ட பகிர்வில் நான் வலியுறுத்தியுள்ளேன் தோழரே!!! //

Comments

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்