தவனைமுறையில் வீட்டுமனைகள் வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விசயங்கள்

"சென்னைக்கு மிக அருகில்" என்பது மிக பிரபலான வார்த்தையாக மாறிபோனதிற்கு காரணம், சாத்சாத் தினம் தினம் புதிது புதிதாக ரியலெஸ்டேட் தொழில் துவங்குபவர்கள் உருவாகுவதே ஆகும். இப்படி மிக இலாபகரமான தொழிலாக வீட்டுமனை விற்கும் தொழில் உருவாகி இருப்பதால் போலிகளிடம் இருந்து உங்களை தற்காத்துக்கொள்ள மிகவும் கவனிப்புடன் இருக்க வேண்டும்.


சுலப  தவனையில் வீடு அல்லது காலி மனை வாங்குவதற்கு முன் நீங்கள் கவனிக்க வேண்டிய விசயங்களாவது,

  •  பொதுவான விசயங்களாக கவனிக்க வேண்டியது என்றால் டிடிசிபி அப்ரூவல், குடிநீர்,  மின்சார வசதி என்பனவற்றையும் தவிர,
  • உங்களுக்கு காட்டப்பட்டிருக்கும் மனைக்கு முறையான வழித்தடம் இருக்கிறதா என்பதை கவனியுங்கள். பெரும்பாலான நிலதரகர்கள் ஏக்கர் கணக்கில் இடம் வாங்கும்பொழுது பூர்வீக பட்டா, சிட்டா வில்லங்களை பற்றியெல்லாம் கவலைபடாமல் உங்களுக்காக காண்பிக்கும் இடத்தை மட்டும் புல்டோசர் விட்டு நிரவி விட்டு,  மனை பிரிவுகளை காண்பிப்பதற்கான தற்காலிக வழித்தடத்தை உருவாக்கி வைத்திருப்பார்கள். காலப்போக்கில் அத்தகைய வழித்தடங்களில் வீடுகள் உருவாகும் போது தான் உண்மையில் அது வழித்தடம் இல்லை என்பதை அறிவோம். சாலைக்கான வழித்தடம் முறையாக உள்ளாட்சி அமைப்பிடம் பதியப்பட்டிருக்கிறதா என்ற தகவலை தெரிந்துகொள்ளுங்கள்.
  • சராசரிக்கும் குறைவான விலையை விளம்பரத்தில் காண்பித்துவிட்டு நேரில் சென்ற பிறகு சைட்டின் முன்பகுதியில் இந்த விலை, நடுவில் இந்த விலை என்று ஏகத்துக்கும் விலைமாற்ற டேரிஃப் வைத்திருப்பார்கள். 
  • மாதம் இவ்வளவு என்று கட்டி வாங்கும் போது பிரைவேட் பேங்க் லோன் வசதி செய்திருப்பார்கள். அவ்வாறன வங்கிகளின் அல்லது தனியார் நிறுவனங்களின் வட்டி விகிதங்களை தெரிந்துகொள்ளுங்கள். சராரியாக 2 இலட்சத்திற்கு லோன் இருந்தாலும் கூட வட்டியுடன் சேர்த்து 2.50 இலச்சத்திற்கும் அதிகமாக அவர்களுக்கு அழ வேண்டியிருக்கும்.
  •  அருகில் வசிப்பிடங்கள் இருக்கின்றனவா என்பதை கண்டறியுங்கள். அவர்களின் வாழ்வாதரத்தை தெரிந்துகொள்ளுங்கள்.
  • பொதுவாக நகருக்கு வெளியில் அமைக்கப்படும் மனைகள் இருக்கும் இடத்தில் முன்பு நீர்வழித்தடம் இருந்திருக்கிறதா என்பதை சுற்றி தெரிந்துகொள்ளுங்கள். பின்னாலில் ஒருவேளை அரசு ஆக்கிரம்ப்பிற்கு உள்ளாக நேரிடும். எச்சரிக்கையாக இருங்கள்.

Comments