வாட்ஸ் ஆப் மென்பொருளை உங்கள் கம்ப்யூட்டரிலும் உபயோகிக்கலாம் - Whats app for PC

        தகவல் தொழில்நுட்பத்தில் நம்மை ஆட்டி வைத்து கொண்டிருக்கும் சமூக வளத்தளங்களுக்கு ஈடாக வளர்ச்சியடைந்துள்ள அற்புதமான மொபைல் போன் செயலி வாட்ஸ் ஆப் (WhatsApp)

     மொபைல் போன் பயனாளிகள் மட்டுமே வாட்ஸ் ஆப் பயன்படுத்துவது முடியும் என்ற நிலைமையில் லேப்டாப் மற்றும் டெஸ்க்டாப் பயனாளிகள் இந்த வாட்ஸ் ஆப் செயலியை நிறுவ பெரும் ஆர்வம் காட்டிவருகின்றனர். 


பொதுவாக ஆன்ட்ராய், வின்டோஸ் போன்ற மொபைல் அப்ளிகேசனுக்கு தோதுவாக அமைக்கப்பட்டிருக்கும் இந்த வாட்ஸ் ஆப் செயலியை உங்கள் கம்ப்யூட்டரில் நிறுவ, நேரடியாக வாட்ஸ் ஆப் நிறுவனம் இன்னும் மென்பொருளை அளிக்கவில்லை எனினும் மாற்று தீர்வாக புளுஸ்டாக்ஸ் (BlueStacks) என்னும் இயங்குதள செயலி உங்களுக்கு உதவுகிறது.

தரவிரக்கம் செய்ய - DOWNLOAD

  • மேற்கண்ட இணைப்பை சொடுக்கி புளுஸ்டாக்ஸ் மென்பொருளை உங்கள் கணினியில் தரவிரக்கம் செய்து நிறுவிக் கொள்ளுங்கள். 

  • புளுஸ்டாக்ஸ் செயலியானது ஆன்ட்ராய்டு அப்ளிகேசன் போல இயங்குதளமாக செயல்படும். எனவே நீங்கள் மொபைலில் ப்ளே ஸ்டோரில்  தரவிரக்கம் செய்வது போலவே இதிலும் எளிதாக வாட்ஸ் ஆப் செயலியை தரவிரக்கம் செய்து வாட்ஸ் ஆப் சேவையை பயன்படுத்தலாம். 
  • உங்கள் மொபைல் எண்ணை பயனர் கணக்கில் பதிவேற்றம் செய்துகொள்ளுங்கள். இனி வாட்ஸ் ஆப் உங்கள் கம்ப்யூட்டரில் செயல்படதுவங்கும்.
  • Starts ----- > BlueStacks ----- > Whats app 
  • மேலும் உங்களின் கூகுள் கான்டக்ஸ் கணக்கை நிறுவி உங்கள் பழைய கான்டாக்ஸ் எண்களையும் அப்படியே இதில் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதும் சிறப்பு  ஆகும்.