கதவைத் திற காசு வரட்டும்-1 -புல்ஸ்ஸ்ட்ரீட் டி.ஏ.விஜய்


 ஒரு கோடி ரூபாய் சம்பாதிக்க வேண்டும். ஆடி கார் அல்லது பிஎம்டபிள்யூ வாங்க வேண்டும்.3பிஎச்கே (3BHK) அபார்ட்மன்ட் வாங்க வேண்டும்.பாங்க் பாலன்ஸை ஏற்ற வேண்டும்.
 இப்படியெல்லாம் ஒரு கலந்து கட்டிய இலக்கை நிர்ணயித்துக் கொண்டால் மனஅழுத்தமும் ஏமாற்றமும்தான் ஏற்படும்.இந்த விஷயத்தில் சின்னக் குழந்தைகளைத்தான் நாம் பின்பற்ற வேண்டும்.அவர்களது ஆசைகள் நிறைய்ய்ய இருக்கும்.ஆனால் சின்னதாக ஏதாவது ஒன்று கிடைத்தால் சமாதானமாகி விடுவார்கள்.அப்புறம் சிறிது நேரம் கழித்து அடுத்து விஷயத்திற்கு அடி போடுவார்கள்.அதற்கப்புறம் அடுத்தது என்று தொடர்வார்கள்.ஆனால் எதை அடைவதற்கும் ஒரு பிடிவாதமான அடம் இருக்கும்.
 நாம் அடம் பிடிக்க வேண்டாம்.
 ஒரு கோடி ரூபாய் வேண்டும் என்றால் ஒரு கோடி ரூபாயேதான் வேண்டும்.பெட்ரோமாக்ஸ் லைட் என்றால் பெட்ரோமாக்ஸ் லைட்தான் வேண்டும்.அதற்காக இன்றைக்கே ஒரு கோடி ரூபாயை அடைவது என்பது வேண்டாம்.
 அப்புறம் என்ன செய்யலாம்.
 ஆசைப்படுங்கள்.
 ஆசைப்படுவதையெல்லாம் எழுதி வைத்துக் கொண்டு அவ்வப்போது எடுத்துப் பாருங்கள்.உடனே அடைவது என்ற வேலை மட்டும் வேண்டாம்.
 சின்னச்சின்னதாய் ஸ்டெப் எடுத்து வையூங்கள்.ஒரு நேரத்தில் ஒரு அடி போதும்.ஒரு நாளைக்கு ஒரு ஸ்டெப் என்று எடுத்து வைத்தால் போதும்.
 ஒரு நாளைக்கு ஒரு ரூபாய் சம்பாதித்தால் போதும் என்று சொல்லிப் பாருங்கள்.ஒரு ரூபாய் என்பது மதிப்பில்லாததாகவே இருந்து விட்டுப் போகட்டும்.ஒரு நாளைக்கு ஒரு ரூபாய் என்பது எளிதான திட்டம்.எளிதான இலக்கு.
 இதை உங்களது பிசினசிலோ வேலையிலோ(வேலையில் என்றால் அந்த வேலை தொடர்பான ஒரு சைடு பிசினசாக இருக்கட்டும்) பணத்தை மிச்சப்படுத்துவதிலோ ஒரு நாளைக்கு ஒரு ரூபாயை மட்டும் சேருங்கள் போதும்.
 இதை எளிதாக செய்யூம் முறை கை வந்தவூடன் இலக்கை சற்று விரிவூ படுத்துங்கள்.
 இப்போது ஒரு நாளைக்கு இரண்டு ரூபாய்.
 அப்புறம் ஒரு நாளைக்கு ஐந்து ரூபாய்.
 அதன்பின் ஒரு நாளைக்கு பத்து ரூபாய்.
 இப்படியே சிறுகச் சிறுக உயர்த்திக் கொண்டே போகலாம்.உடற்பயிற்சி செய்யூம் போது முதலில் ஐந்து தண்டால் அப்புறம் பத்து அதற்கப்புறம் பதினைந்து என்று உயர்த்திக் கொண்டே போவதைப் போல.
 இது எதற்காக என்றால் எப்போதுமே உங்களது இலக்கு அடையக்கூடியதாக இருந்தால் மட்டுமே மனம் அதை நோக்கி வேலை செய்யூம்.அடைய முடியாத சூப்பர் இலக்கை நிர்ணயித்துக் கொண்டால் அதன் மேலேயே வெறுப்பு வந்து விடக்கூடும்.
 வேலையில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு சைடு பிசினசை முயற்சித்துப் பாருங்கள்.சைடு பிசினசா அக்கம் பக்கத்தவர் பார்த்தால் கேலி செய்வார்களே என்ற எண்ணம் இருந்தால் அதை முதலில் குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு என்ன பிசினஸ் செய்யலாம் என்று யோசித்துப் பாருங்கள்.வேலை இல்லாதவர்களும் வேலைக்காக மின்னஞ்சல் போடுபவர்களும் ஏதாவது ஒரு சிறு பிசினசை லெமனேடு போல முயற்சித்துப் பாருங்கள்.
 எது செய்தாலும் ஒரு நாளைக்கு ஒரு ரூபாய் என்ற இடத்திலிருந்து துவங்குங்கள்.ஒவ்வொரு செங்கலாக எடுத்து எடுத்து வைத்துதான் வீடோ காம்ப்ளக்ஸோ கட்ட முடிகிறது.
 அதனால் சின்னச் சின்ன அடியெடுத்து வையூங்கள்.
 அப்புறம் காசு வந்து கதவைத் தட்டும்.
http://bullsstreetdotcom.blogspot.in

Comments

  1. அருமையன தொடர் தினந்தோறும் படித்து வருகிறேன். சேவை தொடர வாழ்த்துகள்.

    ReplyDelete

Post a Comment

உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்