புதிய தொழில்முனைவோர்கள் செய்யும் அடிப்படை தவறுகள்

THE COMMEN MISTAKES OF NEW ENTERPRENEUR 
புதிய தொழில்முனைவோர்கள் செய்யும் அடிப்படை தவறுகள்


ஆங்கிலத்தில்  ENTERPRENEUR என்கின்ற சொல் தொழில்முனைவோர்கள் என்னும் அர்தத்தை கொடுக்கிறது. இங்கு தொழில்முனைவோர்களாக இருக்கும் பலரும் தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படை நுனுக்கங்களை தொழிற்களம் வாயிளாக பகிர்வதில் பெருமையடைகிறோம்.

ஒரு பெரிய அரங்கில் தொழிற்முனைவோர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அங்கு பேசிக்கொண்டிருந்த பயிற்றுனர் மிகவும் கருத்தாளத்துடனும், நகைச்சுவையாகவும் பேசி அரங்கிலிருப்போரை உற்சாகப்படுத்திக்கொண்டிருந்தார். அப்போது அவர்  அரங்கத்திலிருப்போர் அனைவரையும் பார்த்து, "நீங்கள் எதற்காக தொழில் துவங்குகிறீர்கள்"? என்று கேட்டார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான பதிலை சொல்லிக்கொண்டிருந்தனர். ஒரு பெண் தனது கணவருக்கு சுமையை குறைக்க தான் தொழில் துவங்கியதாகவும், மற்றொருவர் பரம்பரை தொழில் விடக்கூடாதுன்னும், பசங்களை நல்லா படிக்க வைக்கவும்னு ஆள் ஆளுக்கு ஒரு காரணத்தை சொன்னார்கள். நிதமாக அனைவரின் பதிலையும் கேட்ட பயிறுனர் சிரித்துக்கொண்டே சொன்னார்,

 "நீங்கள் எதற்காக தொழில் துவங்குகிறீர்கள்"?  என்பதற்கு பலரும் பல காரணத்தை சொன்னீர்கள். என்னைப்பொருத்தவரையில் ஒரே ஒரு காரணம் தான் இருக்கிறது. ஆம், நான் தொழில் துவங்கியதற்கான காரணம், துவங்கிய தொழிலை திரம்பட நடத்தி அதில் பல உயரங்களை தொட்டு வெற்றியடைய வேண்டும் என்பது மட்டும் தான், என்றார்.


இப்பொது உங்களுக்கு நன்றாக புரிந்திருக்கும். சரிதாங்க, நாம புதிதாக தொழில் துவங்கும் போது செய்யக்கூடிய அடிப்படை தவறுகளை பற்றிதான் தெரிஞ்சுக்க போறோம்.

நாம போகின்ற பாதையில் பல இடைஞ்சல்கள் வரும். அப்படி தடைகற்கள் வரும் போது சோர்ந்து போகாம வண்டிய ஓட்டனும்னா எங்க எங்க பிரேக் போடனும்னு தெளிவா தெரிஞ்சுக்கனும். தவறுகளை திருத்திக்கொண்டோம் என்றாலே 90 விழுக்காடு வெற்றியை நெருங்கிட்டோம்னு அர்தப்படும். எனக்கு தெரிஞ்ச வகையில் முடிவெடுப்பதில் செய்யும் சிறிய தவறுகளே பெரும்பாலான வாய்புகளை தட்டிவிட்டுவிடுகிறது. உங்கள் வாய்ப்பினை நீங்கள் சரியாக கட்டமைத்துக்கொள்ளுங்கள். வெற்றி நிச்சயம்.

THE COMMEN MISTAKES OF NEW ENTERPRENEUR 
புதிய தொழில்முனைவோர்கள் செய்யும் அடிப்படை தவறுகள்

1. சூழ்நிலைகளை ஆரய்வதில் தவறவிடுதல்
2. முதலீடு செய்வதில் முட்டாள்தனம்
3. வேலை பார்ப்பதில் வீண் பேச்சு 
4. பிரான்ட் செய்வதில் எகத்தாளம்
5. போட்டியாளர்களை அடையாளம் காண்பதில் ஆணவம்

இந்த முக்கியமான ஐந்து தவறுகளையும் நீங்கள் சரி செய்தால் போதும். உங்களை வெல்ல யாரும் வரமுடியாது. இன்னும் விரிவாக அடுத்த பகுதிகளில் வாசிப்போம்.

- தொழிற்களம்

Comments