இன்றைய ஷேர் மார்க்கெட் நிலவரம் --புல்ஸ்ஸ்ட்ரீட் டி.ஏ.விஜய்  நேற்றைய ஃபெட்(FED)மீட்டிங்கை தொடர்ந்து அமெரிக்க சந்தையில் ஏற்பட்ட எழுச்சி இங்கும் எதிரொலித்திருக்கிறது.இன்றைக்கு வங்கிப் பங்குகள் சரியான ஓட்டத்தை முன்னெடுத்து நிஃப்டியை உயர்த்தி விட்டிருக்கிறது.சரிந்த பங்குகளில் முக்கியமான பங்குகளாக சில ஐடி பங்குகளும் ஜிந்தால்ஸ்டீல்அன்ட்பவர் பங்கும் இருக்கின்றன.
 மத்திய அரசாங்கம் நில கையகப்படுத்தும் சட்டதிருத்தத்தை விட முக்கியமாக நிலக்கரி மற்றும் சுரங்கம் தொடர்பான சட்ட திருத்த மசோதாவின் மீது அதிக அக்கறை கொண்டுள்ளது மட்டுமல்லாமல் இந்த மசோதாவிற்கான திருத்தங்கள் நாளை அந்தந்த கமிட்டிகளிடம் வர இருக்கின்றன.தொடர்ந்து அவை ராஜ்யசபாவிலும் விவாதிக்கப்படும்.
 எனவே இது தொடர்பான பங்குகள் சற்று சலசலப்பிற்குள்ளாகும்.
 எதற்கும் ரிஸ்க் எடுக்கும் முதலீட்டாளர்கள் விலைகுறையூம்போதெல்லாம் ஜிந்தால்ஸ்டீல்அன்;ட்பவர் கோல்இந்தியா போன்ற பங்குகளை கைப்பற்றி வாருங்கள்.
 அது போல ஐடி பங்குகள் விலை குறையூம்போதெல்லாம் வாங்கி வாருங்கள்.அவை ஒரு பூரித நிலைமையை விரைவில் அடைந்து அதன்பின்கீழே வந்து விட வாய்ப்பிருக்கிறது.
 நீண்டநாள் முதலீட்டாளர்கள் உள்ளார்ந்த சீர்திருத்தத்திற்கு ஆளாகவிருக்கும் ரிலையன்ஸ்இன்ஃப்ரா பங்கை கவனித்து வாருங்கள்.நமது தளத்தில் அது பற்றிய அப்டேட் கொடுக்கும்போது வாங்கிப்போடுங்கள்.
 http://bullsstreetdotcom.blogspot.in

Comments