சொல்வதெல்லாம் உண்மை: மதர்சன்சுமி சிஸ்டம்ஸ்..முதலீட்டாளர்களுக்கான பங்கு இது... -புல்ஸ்ஸ்ட்ரீட் டி.ஏ.விஜய்  பயணிகள் கார்களுக்கான கண்ணாடிகள் வயரிங் மற்றும் பிளாஸ்டிக் சாதனங்களை தயாரித்து அளித்து வரும் இந்நிறுவனத்தின் பங்குகள் இப்போது சில நாட்களாக மொமன்ட்டம் காட்டி வருகின்றன.எஃப்அன்ட்ஓவிலும் (குறிப்பாக ஸ்டாக் ஃப்யூச்சரில்) ஈக்விட்டியிலும் இந்த பங்குகள் நின்று ஆடி வருவது குறிப்பிடத் தக்கது.
  கடந்த டிசம்பர் மாதம் இந்த பங்கின் குறைந்த பட்ச விலை ரூ 425 ஆக இருந்திருக்கிறது.இந்த மார்ச் மாதம் இந்த பங்கின் அதிக பட்ச விலை ரூ 509 ஆக இருந்திருக்கிறது.
 ஆக இந்த மூன்று மாதங்களில் எந்த பெரிய சரிவையூம் சந்திக்காமல் எந்த பெரிய உயர்வையூம் சந்திக்காமல் நிதானமாக பயணிப்பது போல தெரிந்தாலும் இன்ட்ரா டேயிலும் பிடிஎஸ்டியாகவூம் ஃப்யூச்சரில் எஸ்டிபிடியாகவூம் இந்த பங்கு லாபத்தை தொடர்ந்து ஒரே சீராக தந்து கொண்டே வந்திருக்கிறது.
 அதாவது இன்ட்ரா டேயில் அதன் குறைவான விலையில் வாங்கி மறுநாள் ஈக்விட்டி அல்லது ஃப்யூச்சரில் விற்கவூம் அல்லது இன்ட்ரா டேயில் அதன் அதிகபட்ச விலைக்கு சற்று கீழே ஷரர்ட் அடித்து விட்டு  மறுநாள் ஃப்யூச்சரில் குறைந்த விலைக்கு வாங்கவூம் ஏற்ற விதத்தில் இந்த பங்கு சுழன்று கொண்டிருக்கிறது.
 ஸ்பெகுலேட்டிவ் டிரேடர்களும் டெரிவேட்டிவ் டிரேடர்களும் குறுகிய கால ஈக்விட்டி டிரேடர்களும் அவசியம் குறித்து வைத்துக் கொள்ள வேண்டிய பங்கு இது.
 http://bullsstreetdotcom.blogspot.in

Comments