இன்றைய மார்க்கெட் நிலவரம்: புல்ஸ்ஸ்ட்ரீட் டி.ஏ.விஜய்

  இன்றைய சந்தை எதிர்பார்க்கப்பட்டபடியே கீழேயே துவங்கியது.அதன்பின் கீழேயே அலைந்து கொண்டிருக்கிறது.வங்கிப் பங்குகள் கடுமையாக சரிந்துள்ளன.பாங்க் நிஃப்டி 1 சதவீதத்திற்கும் கீழாக குறைந்திருக்கிறது.முதல்நிலைப் பங்குகளில் பார்திஏர்டெல்லும் பிஎச்இஎல்லும் முன்னேறி வருகின்றன.இவற்றின் ஏப்ரல் மாத கான்ட்ராக்ட்டில் லேசான மொமன்ட்டம் காணப்படுகிறது.அம்டெக்ஆட்டோவில் ஒரு ஸ்பர்ட் காணப்படுகிறது.இந்த நிறுவனம் பற்றி ஒரு சேதி இருக்கிறது.இதைப் பற்றி பின்னர் ஒரு தனிப்பதிவாக எழுதுகிறௌம்.
 டாடாமோட்டார்ஸ் இறங்குமுகம் காட்டுகிறது.இன்றைக்கு எக்ஸ்பயரி தேதி என்பதால் நேற்றே டிரேடர்கள் ஏப்ரல் மாத கான்ட்ராக்ட்டிற்கு மாறி விட்டனர்.ஈக்விட்டி முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு பதட்டமும் ஒரு எச்சரிக்கை உணர்வூம் காணப்பட்டது.இன்றைய மார்க்கெட் நெகட்டிவ்வாகத்தான் செல்லும் போலத் தெரிகிறது.அபூர்வமாக ஷாட்கவரிங் ஏற்பட்டால் மட்டுமே அதுவூம் ஒரு சிறிய அளவிற்கு மேலே மார்க்கெட்டை தள்ளி விடும்.
 ஆஃப்ஷன் டிரேடர்கள் ஏப்ரல் மாத கான்ட்ராக்ட்டிலேயே டிரேடிங் செய்யூங்கள்.எந்த பங்காவது திசை மாறி திரும்பும் நிலையில் இருப்பது போல தெரிந்தால் அவற்றின் அவூட் ஆஃப் மணியில் கால் அல்லது புட் எது தோதாக இருக்கிறதோ அதனை ஏப்ரல் மாத கான்ட்ராக்ட்டில் வாங்கி வைத்து விட்டு காத்திருங்கள்.
 ஆஃப்ஷன் டிரேடர்களைப் பொறுத்தவரை ஒரு வேண்டுகோள்.
1.இன்ட்ரா டே டிரேடிங்கிற்கான பொசிஷனை மறந்தும் ஒரு போதும் டெலிவரி எடுக்காதீர்கள்.எடுத்து விட்டு அப்புறம் நஷ்டம் நஷ்டம் என்று வருந்தாதீர்கள்.
2.எந்த ஒரு பொசிஷனையூம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்.நாளை மார்க்கெட் நன்றாக இருக்கும் என்று வைத்துக் கொள்ள முயற்சி செய்யவே செய்யாதீர்கள்.
3.ஒரு நேரத்தில் ஒரு பொசிஷன் மட்டுமே கையில் இருக்க வேண்டும்.கவனக்குறைவாகவோ பிடிவாதமாகவோ ஒன்றுக்கு மேற்பட்ட பொசிஷனை கையில் வைத்திருக்கவே வைத்திருக்காதீர்கள்.
4.மிக மிக முக்கியமான வேண்டுகோள்.இன்ட்ரா டேயில் லாபம் வந்தால் அந்த லாபத்தொகையை உடனுக்குடன் பே-அவூட் போட்டு கண்டிப்பாக வெளியே எடுத்தே ஆக வேண்டும்.மறக்காதீர்கள்.கிடைத்த லாபத்தை வொர்க்கிங் கேபிடலுடன் சேர்க்கவே சேர்க்காதீர்கள்.அப்படி குமுலேட்டிவ்வாக சேர்க்க வேண்டுமென்று நினைத்தால் அதனை அதற்கு அடுத்த மாதம் நிதானமா யோசித்து சேர்த்துக் கொள்ளலாம்.மீண்டும் மீண்டும் சொல்கிறௌம்.கிடைத்த லாபத்தை உடனுக்குடன் வெளியே எடுத்தே ஆக வேண்டும் என்பதை மறவாதீர்கள்.
 இவற்றை கடைபிடித்தால்தான் நீங்கள் ஆஃப்ஷனில் பணத்தை அதிகமாக சம்பாதிக்க முயற்சி செய்ய முடியூம்.

Comments