வங்கிகள் நகருது மெல்ல மெல்ல... புல்ஸ்ஸ்ட்ரீட் டி.ஏ.விஜய்
 சென்ற வெள்ளிக்கிழமை வங்கிப் பங்குகள் ஒரு தலைகீழ் ஆட்டத்தை ஆடியதை கவனித்திருந்திருப்பீர்கள்.காலையில் நெகட்டிவ்வாக இருந்த வங்கிப் பங்குகள் அதன்பின் மெல்ல எஸ்பிஐ வங்கியூம் ஐசிஐசிஐ வங்கியூம் மேலே எழுந்தவூடன் ஒன்றன்பின் ஒன்றாக அனைத்து வங்கிப் பங்குகளும் மேலே வந்து விட்டன.இது பாங்க் நிஃப்டி டிரேடர்களுக்கு ஒரு அதிர்ச்சியாகவூம் இருந்திருக்கும்.
 வெள்ளிக்கிழமையன்று ஆர்பிஐ ஒரு அறிக்கையை விட்டிருந்தது.அதாவது வங்கிகள் இதுநாள் வரை அவற்றின் மொத்த மூலதனத்திலிருந்து 55 சதவீதம் வரை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடன் கொடுக்கலாம் என்றிருந்ததை மாற்றி இனி 25 சதவீதம் வரைதான் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் கொடுக்கலாம் என்று சொல்லப்பட்டது.இது  2019லிருந்து முழுமையாக அமலுக்கு வரும் என்றாலும் இதன் பின்னணியை சற்று ஆராய்ந்தால் இது ஒன்றும் 'ஆம் ஆத்மி'த்தனமான முடிவூ இல்லை. 55 சதவீதத்திற்கு பதிலாக 25 சதவீதம் மட்டும்தான் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடன் கொடுப்பது என்றாகி விட்டால் மீதமுள்ள 30 சதவீதத்தை யாருக்கு கொடுப்பது? அந்த பணம் விவசாயிகளுக்கும் சிறு மற்றும் குறுந்தொழில் செய்பவர்களுக்கும் அமைப்பு சாராத தொழில்களில் ஈடுபட்டிருப்பவர்களுக்கும் திருப்பப்படுமா என்றால் அதற்கு இப்போது பதில் இல்லை.இன்னொரு கோணத்தில் பார்த்தால் வங்கிகளை திருப்பி விடுவதற்கு பதிலாக கார்ப்பரேட் நிறுவனங்கள் வங்கிகளையே நம்பிக் கொண்டிருக்காமல் கார்ப்பரேட் பான்ட்டுகள் கமர்ஷியல் பேப்பர் போன்ற இனங்களின் மீது கவனம் செலுத்தும் விதத்தில் திருப்பி விடப்பட்டுள்ளன என்றுதான் பொருள் கொள்ள வேண்டியிருக்கிறது.
 அப்படி ஆனால் ஈக்விட்டி தவிர பான்ட் மார்க்கெட்டிலும் வர்த்தகம் சூடுபிடிக்க வாய்ப்பு மெல்ல மெல்ல உருவாகும்.
 இப்போதைக்கு வங்கிகளுக்கும் கார்ப்பரேட்களுக்கும் ஒரு இடைவெளி உருவாகியூள்ளது.இது நல்லதும் கூட.ஊருக்கு ஊர் தெருவூக்கு தெரு நகைக்கடன் பெற்ற விவசாயிகளின் நகைகளை ஏலத்தில் விடுவதில் முழுப்பக்க விளம்பரம் கொடுத்து ஆவேசமாக செயல்படும் வங்கிகள்(நகைக்கடன் பெற்றவர்களை கெட்ட வார்த்தைகளில் திட்டும் வங்கி அலுவலர்களும் உண்டு என்று கூறுவார்கள்) ஏனோ பெருங்கடன் பெற்று கட்டாமல் நிலுவையில் வைத்திருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களின் சொத்துக்களை ஏலத்தில் விடுவதில்லை.அது போன்ற ஒரு விளம்பரம் கூட செய்தித்தாள்களில் வருவதும் இல்லை.
 எனினும் வங்கிகளை பொதுமக்கள் பக்கமாக திருப்பி விடுவதில் ஆர்பிஐ ஒரு சின்ன அடியை எடுத்து வைத்திருக்கிறது.
 இனியாவது வங்கிகள் திருந்துமா என்று பார்ப்போம்.
http://bullsstreetdotcom.blogspot.in

Comments