ஆஃப்ஷன் வித்தைகள்: இன்ட்ரா டே நேக்கட் டிரேடிங் செய்வது எப்படி? -புல்ஸ்ஸ்ட்ரீட் டி.ஏ.விஜய் ஆஃப்ஷன் டிரேடிங்கில் மட்டும்தான் நேக்கட் (Nacked) என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.இதற்கு அர்த்தம் ஒன்றும் செய்யாமல் அப்படியே விட்டு விடுதல் என்பதுதாகும்.
 பொதுவாக ஆஃப்ஷனில் ஷார்ட் செல்லிங் செய்யூம்போது இந்த நேக்கட் செல்லிங்கைப் பயன்படுத்துவார்கள்.
 இப்போது இதனையே இன்ட்ராடே லாங்கிற்கு எவ்வாறு செய்வது என்று பார்ப்போம்.
 இதனை தினமும் செய்யக் கூடாது.
 ஒரு பங்கை கவனித்து வரவேண்டும்.அந்த பங்கிற்கு சரியான மொமன்ட்டம் இருக்கிறது என்றாலோ அந்த பங்கிற்கு ஆதரவான செய்தி சந்தையில் உலவூகிறது என்றாலோ அன்றைய தினத்திற்கு மட்டும் இந்த இன்;ட்ரா டே நேக்கட் டிரேடிங்கை செய்வது பொருத்தமாக இருக்கும்.
 முதலில் ஒரு பங்கை தேர்வூ செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
 அந்த பங்கின் லாட் அளவூ குறைந்தது 1000 ஆக இருக்கட்டும்.அதற்கும் குறைவான லாட் அளவூள்ள பங்குகள் இருக்கும்.ஆனால் அவை வேண்டாம்.
  அந்த பங்கின் எந்த விலைப்புள்ளியில்(அதாவது ஸ்ட்ரைக் பிரைசில்) வாங்கினால் அதன் விலை ரூ 3.00 என்ற அளவில் இருக்குமோ அந்த விலைப்புள்ளியில் மட்டும் உள்ள பங்கை உங்களது விருப்பம் போல கையில் உள்ள பணத்திற்கு ஏற்ப எத்தனை லாட் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளுங்கள்.
 இந்த டிரேடிங்கில் ஸ்டாப்லாஸ் போட வேண்டாம்.
 செல்லிங் ஆர்டரும் போட வேண்டாம்.வேண்டுமானால் பாதுகாப்பிற்காக ரூ 3.00க்கு வாங்கிய பங்கிற்கு ஒரு செல்லிங் ஆர்டரை ரூ 15 என்று போட்டு வைத்துக் கொண்டு காத்திருங்கள்.
 அந்த பங்கின் துடிப்பு அதிகரித்தால் மெல்ல மேலேறும்.
 அப்படி ஏறுவது ரூ 15.00க்கு வந்தால் தானாக விற்று விடும் நீங்கள் செல்லிங் ஆர்டரை போட்டு வைத்திருந்தால்.செல்லிங் ஆர்டர் போடாத தருணத்தில் கவனித்து வாருங்கள்.
 சரியான மொமன்டம் இருந்து ஒரு ஜாக்பாட்டை நோக்கி அந்த பங்கு வேகமாக நகர்ந்தால் அது ரூ 20.00 அல்லது அதற்கு மேலாகக் கூட நகரக் கூடும்.ஆனால் இது தினமும் நடக்காது என்ற ரியாலிட்டியை புரிந்து கொள்ளுங்கள்.ஆனால் எப்போதாவது(குறைந்தது ஒரு மாதத்திற்கு நான்கு முறையாவது வெவ்வேறு பங்குகளில் நடக்கத்தான் செய்கிறது) நடக்கிற இந்த ஜாக்பாட் லாபத்தை ஏன் விடுவானேன்.
 ரூ 3.00க்கு வாங்கியது ரூ 15.00க்கு சென்றாலோ அல்லது ரூ 20.00க்கு மேலே சென்றாலோ விற்று வெளியே வந்து ஸ்வீட் எடுத்து கொண்டாட வேண்டியதுதானே.
 ஏனெனில் நேக்கட் இன்ட்ரா டே டிரேடிங்கில் கிடைக்கக் கூடிய லாபம் சுமார்  பத்தாயிரம் முதல் இருபதாயிரம் வரை கிடைக்கும்.ஆனால் கவனித்துப் பாருங்கள்.போட்ட முதல் வெறும் ரூ 3000தான்.அதாவது போனால் போகட்டும் என்று களமிறக்கிய ரூ 3000தான் ஜாக்பாட் லாபத்தை கொண்டு வந்து தருகிறது.
 மேலும் இது போன்ற சூப்பர் டெக்னிக்குகளை நமது தபால்வழிப் பயிற்சியில் நீங்கள் கற்றுக் கொள்ளலாம்-
 நீங்கள் இப்போதிருக்கிற பொருளாதார நிலைமையிலிருந்து விடுபட்டு லட்சங்கள் கோடிகள் என்று ஒரு உன்னதமான பணவளத்தை நோக்கி நகர விரும்புவராக இருந்தால்!
http://bullsstreetdotcom.blogspot.in

Comments