செயில்(SAIL)- என்டிபிசி (NTPC) மேலே ஏறப்போகிறதா?நீண்டகாலமாக கிணற்றில் போடப்பட்ட கல் போல கிடக்கின்ற ஒரு பங்கு என்றால் அது வங்கிப் பங்குகளில் ஐஓபியூம் உலோகப் பங்குகளில் செயில் பங்கும் என்று சொல்லலாம்.அவ்வப்போது நிதானமாக ஏறியூம் மிதமாக இறங்கியூம் வரும் பங்கு என்றால் அது என்டிபிசி என்று சொல்லலாம்.
  கோல்ப்ளாக்குகளை தனது பப்ளிக் லிமிடட் நிறுவனங்களுக்கு பிரித்துக் கொடுப்பதுதான் முக்கியமானதாக கருதுகிறௌம் என்று சொல்லி வந்த மத்திய அரசு இப்போது 38 கோல்ப்ளாக்குளை இது போன்ற முன்னணி பொதுநிறுவனங்களுக்கு அளிக்க முடிவெடுத்திருக்கிறது.இதில் செயில் மற்றும் என்டிபிசி ஆகிய இரண்டு நிறுவனங்களும் பிரதான இடம் வகிக்கின்றன என்பதால் இது இந்த பங்குகளின் மீது ஒரு ஈர்ப்பை வேண்டுமானால் ஏற்படுத்தலாமே தவிர இந்த பங்குகளை உடனே வாங்கிப் போடவேண்டுமென்ற அவசரமில்லை.இந்த பங்குகளின் அடுத்த நிதிநிலை அறிக்கையைப் பார்த்து விட்டு முதலீட்டாளர்கள் இந்த பங்குகளில் பயணிப்பதா வேண்டாமா என்று முடிவெடுக்கலாம்.அதுவரை காத்திருக்கவூம்.
ஆஃப்ஷன் டிரேடர்களுக்கு இதெல்லாம் தேவையில்லை.ஒரு செய்தி வருகிறதா அதனை வைத்து அன்றைய தினமே காசு பார்ப்பது என்பதுதான் ஆஃப்ஷன் டிரேடர்களின் ஸ்ட்ராட்டஜி என்பதால் இரண்டொரு நாட்களில் ஆஃப்ஷன் டிரேடர்கள் ஒரு முடிவெடுத்து இந்த பங்குகளின் (CALL or PUT) மீது பாயலாம்.

Comments