இன்றய மார்க்கெட் நிலவரம்... புல்ஸ்ஸ்ட்ரிட் டி.ஏ.விஜய்
 சற்று தட்டுத்தடுமாறித்தான் சந்தை சென்று கொண்டிருக்கிறது.வங்கிப் பங்குகள் மற்றும் ஐடி பங்குகள் பெரிதாக கை கொடுக்கவில்லை.ரியல்டி பங்குகளிலும் ஒருவித தயக்கம் தென்படுகிறது.ஃபார்மா பங்குகளின் ராலி இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.சன்ஃபார்மா ஆரோஃபார்மா சிப்லா டாபர் டாக்டர்ரெட்டி போன்ற பங்குகள் துடிப்பாக வர்த்தகமாகி வருகின்றன.ரேட் கட் எதுவூம் இப்போதைக்கு ஆர்பிஐயால் அறிவிக்கப்படப்போவதில்லை என்பதில் வங்கிப் பங்குகள் அமைதியாக இருக்கின்றன.பார்திஏர்டெல் சிறிது மொமன்டம் காட்டுவது போல தெரிகிறது. சுரங்கம் தொடர்பான உரிமங்கள் அப்படியே புதுப்பிக்கப்படப் போகின்றன என்ற அறிவிப்பால் அவை தொடர்பான பங்குகள் சிறிது ஏற்றம் காட்டலாம்.ரூபாயின் ஸ்திரதன்மை காரணமாக ஐடி பங்குகள் சிறிது ஆட்டம் காட்டுகின்றன.அடுத்த காலாண்டில் இன்னமும் மோசமான முடிவைத் தரப்போகின்ற பங்குகள் என்று எதிர்பார்க்கப்படுபவைகளாக எச்சிஎல்டெக் பங்கும் டிவிஎஸ்மோட்டார் பங்கும் இடம் பிடித்துள்ளன.ஐடிசியூம் ஹிந்துயூனிலீவர் பங்கும் சந்து கிடைத்தால் புகுந்து மேலே ஏறி விடுவோம் என்பது போல நிற்கின்றன.
http://bullsstreetdotcom.blogspot.in

Comments