இப்போதைய மார்க்கெட் நிலவரம்: புல்ஸ்ஸ்ட்ரீட் டி.ஏ.விஜய்


 இன்று காலையில் தயங்கித் தயங்கி நெகட்டிவ்வாக தலைகாட்டிய சந்தை மெல்ல மெல்ல இதோ அதோ என்று கீழே வந்து விட்டது.இன்று சந்தை பாசிட்டிவ்வாக ஓப்பன் ஆகும் என்று ஒரு பெரிய டிவி சேனலில் இணையதளம் கூட காலையில் செய்தி வெளியிட்டிருந்தது.ஆனால் சந்தை நெகட்டிவ்வாகத்தான் துவங்கியது.
 இன்றய சந்தையின் படுவீழ்ச்சிக்கு ஐடி பங்குகளும் வங்கிப் பங்குகளும்தா;ன பிரதானமான காரணமாக அமைந்தன.ஐடி பங்குகள் என்று சொல்லும்போது ஒரு விஷயத்தை இங்கே குறிப்பிட வேண்டும்.இன்னும் சில ஆண்டுகளில் இந்தியாவிலுள்ள ஐடி பணியாளர்கள் குறிப்பாக பிபிஓவில் இருப்பவர்கள் பாதிக்கும் மேல் வேலை இழப்பார்கள் என்று ஒரு ஐடி வல்லுநர் தெரிவித்தார்.இதற்கு காரணம் பெரும்பாலான ஐடி நிறுவனங்களும் பிபிஒ நிறுவனங்களும் சைனா கொரியா என்று தனது வணிகத்துக்கான அலுவலகங்களை அங்கே மாற்றிக் கொள்ளப் போகின்றன.காரணம் மலிவான ஊதியம் கொடுத்தால் அங்கே குப்பை கொட்டி விடலாம் என்று நிறுவனங்கள் யோசித்து வருகின்றன.இதில் இந்திய நிறுவனங்களும் அடங்கும் என்றார்.இதைப் பற்றி இன்னொரு பதிவில் பார்க்கலாம்.
 இன்றைக்கு சந்தையில் திரும்பத் திரும்ப காசு கொடுத்த பங்கு எது என்றால் டாடாமோட்டார்ஸ்தான்.எப்போது டாடாமோட்டாரை கையில் எடுத்தாலும் டாடாமோட்டாரில் போய் டிரேடிங் செய்ய வேண்டுமா என்று டாடா காரில் ஏறியது போலவே ஒரு அலுப்பாக இருக்கும்.ஆனால் ஐம்பது பைசா வித்தியாசத்தில் இதுவரை பத்து தடவைக்கும் மேல் சம்பாதிக்கும் வாய்ப்பை இந்த பங்கு ஆஃப்ஷனில் கொடுத்து விட்டது.எடுத்த பொசிஷனை உடனுக்குடன் விற்று தீர்ப்பது என்ற முறையில் செயல்படும் காஸினோ ஆஃப்ஷன் டிரேடிங் டிப்ஸில்தான் செய்ய முடியூம்.அதுவூம் பத்து லாட்களுக்கு மேல் செய்தால்தான் சரியாக வரும்.
 வொர்க்ஹாட் பங்கில் டிரேடிங் செய்பவர்கள் சற்று யோசித்துச் செய்யூங்கள்.செபியின் ராடார் இந்த பங்கின் மேல் பதிந்துள்ளதாக செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன.
 இன்றைய சந்தையில் எண்ணைய்ப் பங்குகள்தான் முன்னிலை வகிக்கின்றன.பார்த்து கவனமாக டிரேடிங் செய்யூங்கள்.

Comments