நாளை வருவது யாருக்குத் தெரியூம்..... புல்ஸ்ஸ்ட்ரீட். டி.ஏ.விஜய்


 மார்ச் மாத சீரீஸூம் அதற்கு முன் பட்ஜட் பற்றிய எதிர்பார்ப்பும் ஏதோ ஒரு வகையில் சென்று முடிந்து விட்டாலும் இந்த ஏப்ரல் மாத சீரீஸ் மட்டும் கம்மென்று கமுக்கமா இருப்பதாக நம்மிடம் டிரேடிங் டிப்ஸ் வாங்கி அவர்களது வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கும் ஷேர் டிரேடிங் கம்பெனிகள் தெரிவிக்கின்றன.
 நிஃ;ப்டியைப் பொறுத்தவரை பொதுவாக 8350ல் துவங்கிய ஆட்டம்  8700க்கு மேலே வந்தவூடன் தடுமாற்றத்தை சந்திக்க ஆரம்பித்து விட்டது.காரணம் என்னவோ கிரீஸ் பிரச்சனை ஆர்பிஐ அறிக்கை லாபநோக்கம் கருதி விற்கிறார்கள் சந்தைக்கு இடையிடையே விடுமுறைகள் வந்தன என்று சொல்லப்பட்டாலும் நிஃப்டி 8750க்கு மேலேயே இருந்தால்தான்  ஒரு காளை ஓட்டத்திற்கு  ஏற்பட்டிருந்த தடைகள் அகன்று விட்டன என்று தைரியமாகச் சொல்லலாம்.அப்படி இல்லையென்றால் மேலும் கீழுமாக குழந்தைகள் ஆடும் சீஸா ஆட்டம் போல ஆடிக்கொண்டிருக்கும்.
 இதில் ஒரு பாசிட்டிவ்வான விஷயம் என்னவென்றால் இரட்டை வரிவிதிப்பிலிருந்து விலக்கு தரும் சலுகையை(டிடிஏஏ) மொரீஷியஸ் சிங்கப்பூர் போன்ற நாடுகளைச் சேர்ந்த அந்நிய முதலீட்டாளர்களுக்கு கேபிடல் கெயின் வரியிலிருந்து விலக்கு தரப்படும் என்ற சலுகை அந்நிய முதலீட்டாளர்களை கவர்ந்து இழுந்து அதிக முதலீட்டை உள்ளே கொண்டு வரும் என்பதுதான்.
 எப்படி இருந்தாலும் ஈக்விட்டியில் உள்ளவர்கள் ஸ்டாப் லாஸை போட்டுக் கொள்வதுடன் ஆஃப்ஷனில் அதே பங்கிலோ அல்லது நிஃப்டியிலோ புட் எடுத்து வைத்துக் கொள்வது ஆபத்து காலங்களில் உதவூம்.
 நாளை தெரியூம்.
 சந்தையின் போக்கும்.சாதகமான போக்கும்.

Comments