இப்போது அவூட் ஆஃப் மணி ஆஃப்ஷனை எடுக்க உகந்த காலம் - புல்ஸ்ஸ்ட்ரீட் டி.ஏ.விஜய்
ரூ 300ஐ ஈக்விட்டியில் எட்டிய பங்குகள் எல்லாம் இப்போது ரூ 230க்கு அருகில் வந்திருக்கிறன.
ரூ
160க்கு அருகில் ஈக்விட்டியில் இருந்த பங்குகள் எல்லாம் ஓவர் பாட்
ஆகி(அதாவது அதிகம் வாங்கப்பட்டு) ரூ 210ஐ தாண்டிய நிலைக்கு
வந்திருக்கின்றன.
அவூட் ஆஃப் மணி கால் ஆஃப்ஷன்களில் எந்த ஸ்ட்ரைப்
பிரைசில் எடுக்க வேண்டுமென்பதை பிறகு பார்த்துக் கொள்ளலாம்.ஆனால் குறைவான
விலையில் அதாவது சிறிய பிரிமியத்தில் டிரேடாகிக்கொண்டிருக்கும் ஆஃப்ஷனாக
கால் மற்றும் புட் ஆஃப்ஷனில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.அதாவது
வெவ்வேறு பங்குகளில் கால் மற்றும் புட் எடுக்க வேண்டும்.
சரி என்ன
விலையில் எடுக்கலாம் என்று கேட்டால் சுமார் பத்து பைசா முதல் முப்பது பைசா
வரை டிரேடாகிக்கொண்டிருக்கிற 1000 லாட் அளவூள்ள பங்குகளில் பொசிஷன் எடுக்க
வேண்டும்.
சென்ற வாரம் கூட வங்கிப் பங்குகளில் அவூட் ஆஃப் மணி
ஆஃப்ஷன் எடுக்க அருமையான வாய்ப்பு வந்து அதனைப் பயன்படுத்தினோம்.அப்படி
பயன்படுத்திய பங்குகளில் ஒன்றாக அப்போது பாங்க்பரோடா இருந்தது.
அதன்
200 கால் ஆஃப்ஷனை ஐம்பது பைசாவில் வாங்கி அதனை இரண்டு ரூபாய்க்கு
விற்றௌம்.லாட் அளவூ 1250 இதற்கான முதலீடு ரூ 650 ஆக இருந்தது.ஆனால் அந்த ரூ
650 என்பது சில நாட்களிலேயே ரூ 2500 ஆக உயர்ந்தது.
பத்து லாட் எடுத்தவர்கள் ரூ 25000ஐ அடைந்தார்கள்.
இப்போது
அவூட் ஆஃப் மணி ஆஃப்ஷனை எடுக்க உகந்த காலம்.இன்றைக்கோ அல்லது இரண்டொரு
நாளிலோ உரிய பங்கை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.கொழுத்த லாபத்தை அது
எக்ஸ்பயரிக்குள் கொண்டு வந்து கொடுத்து விடும்-சரியான பங்கிலும் சரியான
திசையிலும் நீங்கள் மட்டும் இருந்து விட்டால்!
No comments:
உங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்