அட்சயதிருதியை -தங்கம் வாங்க பணமில்லாதவர்களுக்கான பரிகாரம்... புல்ஸ்ஸ்ட்ரீட் டி.ஏ.விஜய் விற்கிற விலைவாசியில் எல்லோராலும் அட்சயதிருதியை தினத்தன்று தங்க நகைகளோ தங்கக் காசுகளோ வாங்க முடியூமென்று தெரியவில்லை.பணம் உள்ளவர்கள் வாங்கிக் குவிக்கட்டும்.பணம் இல்லாதவர்களுக்கு ஏதாவது செய்யூங்களேன்.வழக்கமா ஏதாவது எளிமையான பரிகாரங்களை நமது தளத்தில் தருவீர்களே அது போல இதற்கும் ஏதாவது இருக்கிறதா என்று பல்லடத்திலும் ஈரோட்டிலும் இருந்து இரண்டு வாசகர்கள் கேட்டிருந்தார்கள்.
 இதோ அந்த எளிமையான பரிகாரம்.
 இந்த அட்சயதிருதியை தினத்தன்று தங்கம் வாங்க பணமில்லையே என்று வருந்த வேண்டாம்.அடுத்த அட்சயதிருதியை தினத்திற்குள் தங்கமோ அல்லது தங்கம் வாங்க பணமோ உங்களிடம் சேர்ந்து விடும் இந்த பரிகாரத்தை நம்பிக்கையூடன் செய்தால்.
 ஒரு மஞ்சள் நிற துணியை எடுத்துக்கொள்ளுங்கள்.அதில் சிறிதளவூ காப்பு அரிசி என்று சொல்லப்படும் மஞ்சள் தடவிய அரிசியை போட்டுக் கொள்ளுங்கள்.அத்துடன் அந்த துணியில் முப்பத்திமூன்று ஒரு ரூபாய் காசுகளை (இயன்றால் மஞ்சள் நிறத்தில் கிடைக்கும் 33 ஐந்து ரூபாய் காசுகளை போட்டுக் கொள்ளலாம்) இவற்றை ஒரு முடிச்சாகக்கட்டி எடுத்துக் கொண்டு உங்களது வீட்டு பூஜையறையிலோ அல்லது பூஜை கப்போர்டிலோ உள்ள மகாலட்சுமி அல்லது குபேரன் இரண்டும் இல்லையென்றால் சாதாரண முருகன் படமே கூட போதும்.அந்த படத்தின் கீழே இந்த மஞ்சள் துணி முடிச்சை வைத்து விட்டு நெய்விளக்கேற்றுங்கள்.நல்லெண்ணெய் விளக்கு வேண்டாம். அத்துடன் உங்களுக்குப் பிடித்த இஷ்ட தெய்வத்தை எண்ணி
'என்னால் இவ்வளவூதான் இப்போது முடியூம்.இதற்கு எனது கிரகநிலைகளோ எனது கர்மாவோ கூட காரணமாக இருக்கலாம்.ஆனால் அதையூம் மீறி நான் உனக்கு இந்த முப்பத்தி மூன்று காசுகளை தங்கக்காசுகளாக பாவித்து உனக்கு மானசீகமாக அர்ப்பணம் செய்கிறேன்.இந்த காசுகளை தங்கக் காசுகளாக எண்ணி ஏற்றுக் கொள் என்று அந்த முப்பத்தி மூன்று காசுகளையூம் உங்களது இஷ்ட தெய்வத்திற்கு காணிக்கையாகச் செலுத்தி விடுங்கள்.அதனை பிறகு கோவில்களில் கொண்டு போய் போட்டு விடாதீர்கள்.அது பாட்டுக்கு ஒரு ஓரத்தில் உங்களது பூஜையறையில் இருக்கட்டும்.அதைப் பார்க்கிற போதெல்லாம் உங்களது இஷ்டதெய்வத்திற்கு  மனம் உருகுவது மட்டுமல்லாமல் இறைவனுக்கே ஒரு இரக்கம் தோன்றி விடும்.
 நேரமும் வசதியூம் இருந்தால் இத்துடன் நைவேத்தியமாக சிறிது 'அவல் பாயாசம்" வைத்து வழிபடுங்கள்.அவல் பாயாசம்தான் வைக்க வேண்டும்.சேமியோவோ ரவா பாயாசமோ வைக்கக் கூடாது.
 மாலைநேரத்தில் ஒரு விளக்கு மட்டும் வாசலில் அல்லது மொட்டை மாடியில் அல்லது சிட்அவூட்டில் ஏற்றி வையூங்கள் போதும்
 இந்த எளிமையான பரிகாரத்தை செய்து பாருங்கள்.மற்றவர்களுக்கும் இதனை ஷேர் செய்யூங்கள்.அக்கம் பக்கத்து வீடுகளில் உள்ளவர்களுக்கும் இதனை செய்யச் சொல்லுங்கள்.அவர்களும் பயனடையட்டும்.
பின்குறிப்பு: ஷேர் டிரேடிங் செய்பவர்கள் நாளை ஒரு தினம் மட்டும் மதியம் 1 மணி முதல் 2 மணிக்குள் 3 அல்லது 9 என்று உங்களால் முடிந்த எண்ணிக்கையில் ஸ்ரீகணேஷ் ஜூவல்லரி(SGJHL) என்ற பங்கை வாங்கி வையூங்கள்.இந்த பங்கு ரூ 16 என்ற விலையில்தான் டிரேடாகிக் கொண்டிருக்கிறது.http://bullsstreetdotcom.blogspot.in

Comments