பங்குச்சந்தை சரிவை நோக்கியே செல்கிறது...புல்ஸ்ஸ்ட்ரீட் டி.ஏ.விஜய்

உலகளவில் நிலவி வரும் கடன்சுமைகளும் பணவீக்கமும் அந்தந்த நாட்டு சந்தையை தொடர்ந்து பாதித்துதான் வருகிறது.நமது நாட்டில் எஃப்ஐஐக்களை மேட் வரி தொடர்பான இழுபறி மனோதத்துவ அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதை சந்தையில் அவர்கள் காட்டும் பட்டும் படாமலிருப்பது போன்ற ஈடுபாட்டிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது.
 ஐடி பங்குகள் இன்றைக்கு ஏறியிருப்பதற்கான காரணம் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு மிகவூம் குறைந்திருப்பதுதான்.ஆனால் தொடர்ந்து ஐடி பங்குகள் ஏறுமுகத்தில் செல்லும் என்று சொல்வதற்கில்லை.
 டிஐஐக்களால் எவ்வளவூதான் சந்தையை தாங்கிப் பிடிக்க முடியூம் என்றும் தெரியவில்லை.அதனால் தற்போதைய சந்தை என்பது ஒரு பியர் மார்க்கெட் சந்தை என்று அறிவிக்கப்படாவிட்டாலும் இந்த சந்தை ஈக்விட்டிக்கு எதிரான சந்தையாக இருக்கிறது.
 அதனால் இப்போதாவது விழித்துக் கொள்ளுங்கள்.
 ஈக்விட்டி இப்போதைக்கு வேண்டாம்.
 ஆஃப்ஷன் டிரேடிங் ஒன்று மட்டுமே தினமும் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பை தருவதாக இருக்கிறது.http://bullsstreetdotcom.blogspot.in

Comments