கோச்சார கிரகநிலைகள் பங்குச்சந்தையை பாதிக்கிறதா?


சுருக்கமாகக் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயங்கள் இரண்டு ஜோதிடரீதியாக ஷேர் மார்க்கெட்டில் இருக்கிறது.பெரிய கிரகங்கள் என்று சொல்லப்படுகிற இரண்டுகிரகங்களான சனியூம் குருவூம் அந்த கிரகங்கள்.
  சனியின் தற்போதைய நிலை விருச்சிகத்தில் சனி உட்கார்ந்திருக்கிறது.விருச்சிகத்தின் கிரகம் செவ்வாய்.இந்த கிரகம் பூமிகாரகன் என்று அழைக்கப்படும்.சனி ஒரு மந்தமான மற்றும் விவகாரமான கிரகம்.'கெட்டேடே பய சார் இந்த சனி' என்று தாராளமாகச் சொல்லி விடலாம்.மேலும் பொதுவாக சனியூம் செவ்வாயூம் இணைந்தால் இதனை இரு பாவகிரகங்களின் இணைவூ என்றும் இந்த இணைவூ ஒரு பாதகமான பலனைத்தான் தரும் எனலாம்.
 எனவே சனி செவ்வாய் காம்பினேஷன் தற்போது இருப்பதால்தான் மத்திய அரசாங்கம் பெரும் முயற்சி செய்து வரும் நிலசீர்திருத்த மசோதா தள்ளிக் கொண்டே போகிறது.அது மட்டுமல்லாமல் இந்த பாவகிரகங்களின் காம்பினேஷன் இந்த நிலசீர்திருத்த மசோதா காரணமாக மத்திய அரசிற்கு சிக்கலையூம் அவப்பெயரையூம் ஏற்படுத்தும் நிலைமை காணப்படுகிறது.இது ஒரு பட்டாம்பூச்சி விளைவூ போல பங்குச்சந்தையிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.பாதிப்பு என்றால் மேலும் கீழுமான ஏற்ற இறக்கத்தைக் கொண்டு வரும்.அது எப்படி இருக்குமென்றால் சந்தை கீழே சரியூம்போது கரக்க்ஷன் வந்து விட்டதோ என்று நினைக்கத் தோன்றும்போதே மறுபடியூம் சந்தை மேலே ஏறும்.சந்தை மேலே ஏறுகிறதே என்று சந்தோஷப்படும்போதே தலையில் குட்டு வைப்பது போல சந்தையில் ஒரு சரிவூ ஏற்படும்.இந்த இழுபறி மாறி மாறி ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.
 தற்போதைய நிலையில் குரு பகவான் கடகத்திலிருந்து விருச்சிகத்திலுள்ள சனியை பார்த்துக் கொண்டிருப்பதால்தான் பெரிய பாதகமான சூழல் ஏதும் ஏற்படாமல் சந்தை தப்பித்துக் கொண்டே வந்திருக்கிறது.வருகிற சில மாதங்களுக்குப் பிறகு ஏற்படக்கூடிய குருப்பெயர்ச்சிக்குப் பிறகு சனிக்கு குருவின் பார்வை கிடைக்காமல் போய் விடும்.அதனால் சனி தன் அட்டகாச திருவிளையாடலை ஆரம்பித்து ஆட்டம் போட ஆரம்பித்து விடும்.
  இந்நிலையில் குருப் பெயர்ச்சிக்கு பிறகு குரு சிம்மத்தில் அமர்ந்து தனுசை பார்க்கப்போகிறது.அதாவது தன் வீட்டை தானே பார்க்கப் போகிறது.இப்படி ஒரு சூழ்நிலை அமைவது பொதுத்துறை வங்கிகளுக்கு அதாவது அரசாங்க உடமையாக்கப்பட்டுள்ள வங்கிகளுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம்.இந்த வங்கிப் பங்குகள் வெகுவாக விலை ஏறும்.குறிப்பாக பாங்க்ஆஃப்பரோடா வங்கி மிகப்பெரிய உச்சம் பெறும்.அதெப்படி பாங்க்ஆஃப்பரோடா வங்கி மட்டும் உச்சம் பெறும் என்பதற்கு ஒரு தனிப்பட்ட காரணம் இருக்கிறது.அதை இன்னொரு தனிப்பதிவாக எழுதினால்தான் சுவாரஸ்யமாக இருக்கும்.
 அது மட்டுமல்லாமல் கமாடிட்டி சந்தையில் தங்கத்தின் விலை மறுபடியூம் விறுவிறுவென்று ஏறும்.http://bullsstreetdotcom.blogspot.in

Comments