அடியெடுத்து நகர்கிறது சந்தை... புல்ஸ்ஸ்ட்ரீட் டி.ஏ.விஜய்


நேற்றைய சரிவிற்கு பின்னால் சந்தை விழுந்து விடுமோ என்ற பதைபதைப்பு அனைவருக்கும் இருந்துள்ளது இன்றைய மார்க்கெட்டின் துவங்க நிலையில் தென்பட்டது.பாசிட்டிவ்வாகவே  துவங்கியதற்கு காரணம் உலகக் காரணிகள் நன்றாக இருந்ததுதான் காரணம்.அதனால் சின்னச் சின்னதாக ஒவ்வொரு நிலையிலும் பையிங் இருந்து கொண்டே இருந்தது.
  வங்கிப் பங்குகளின் இன்டக்ஸ் இன்று ஒரேயடியாக மேலே சென்றிருந்தாலும் தனிப்பட்ட வங்கிப் பங்குகளில் பெரிய மொமன்ட்டம் காணப்படவில்லை.எஸ்பிஐ வங்கியின் காலாண்டு முடிவினை சந்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதும் ஒரு காரணம்.தனியார் வங்கிப் பங்குகளில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐசிஐசிஐ வங்கி பெரிய லாபத்தை டிரேடர்களுக்குத் தரவில்லை.மைக்ரோ டிரேடிங்கிற்கு மட்டுமே ஐசிஐசிஐ இன்று பயன்பட்டது.யெஸ் மட்டுமே பெரிய லாபத்தை கொண்டு வந்து தந்தது.
  அடுத்த வாரத்தை நோக்கிய நகர்விலேயே சந்தை சென்று கொண்டிருக்கிறது.அடுத்த வாரம் எஃப்அன்ட்ஓ எக்ஸ்பயரி வேறு இருப்பதாலும் டாலர் விலை உயர்ந்து கொண்டே இருக்கும்போது கச்சா எண்ணை விலை தாழ்ந்து கொண்டே இருப்பதால் ஒரு விதமான ஸ்விங் டிரேடிங்கிற்கு மார்க்கெட்டும் நிஃப்டியூம் தன்னை தயார் செய்து கொண்டிருக்கின்றன.
 எனவே நிதானமாக அதே சமயம் வேகமாக முடிவெடுத்து ஒரே பங்கில் டிரேடிங் செய்து கொண்டிருக்காமல் வலையை அகல விரித்து வீசுவது போல பலவிதமான பங்குகளிலும் டிரேடிங் செய்து கொண்டிருந்தால் குறைவில்லாத லாபம் கிடைக்கும்.http://bullsstreetdotcom.blogspot.in

Comments