எக்ஸ்பயரி தின ஆஃப்ஷன் ஸ்ட்ராட்டஜிகள் --புல்ஸ்ஸ்ட்ரீட் டி.ஏ.விஜய்

அமெச்சூர் ஆஃப்ஷன் டிரேடர்கள் எக்ஸ்பயரி தினம் வருகிறதென்றாலே அச்சத்துடன் இருப்பார்கள்.ஆனால் இந்த எக்ஸ்பயரி தினத்தில் மட்டுமே லட்சக்கணக்காக ரூபாய்களை லாபமாக அடையக் கூடிய விதத்தில் குஜராத் மாநிலத்தில் பல டிரேடர்கள் (அவர்களில் சிறுவர்களும் பெண்களும் உண்டு) இருக்கிறார்கள்.சின்னஞ்சிறு முதலீட்டை வைத்துக் கொண்டு அசால்டாக எக்ஸ்பயரி தினத்தன்று லாபத்தை பல மடங்கு லவட்டி விடுவார்கள்.
 எக்ஸ்பயரி தினத்தன்று வருகிற டிரேடிங்கிற்கு என்றே சில ஸ்ட்ராட்டஜிகள் உள்ளன.இவை எனது அனுபவத்தில் கண்டுபிடித்தவை.
 சில பங்குகளும் இருக்கின்றன.எக்ஸ்பயரி தினத்தன்று சக்கை போடு போடுபவைகளான அந்த பங்குகள் இருக்கின்றன.அவற்றை கண்டுபிடித்து எப்போதுமே ஒரு லிஸ்ட் வைத்துக் கொள்ள வேண்டும்.எக்ஸ்பயரி தினத்தன்று நேரத்தை மட்டுமே ஸ்டாப்லாஸாகப் போட வேண்டும்.
 அரை மணி நேரம் என்பது ஸ்டாப்லாஸாக இருக்கட்டும்.ஆனால் சரியான ஸ்ட்ராட்டஜியாக இருந்தால் பத்து நிமிடத்திலேயே உங்களது டார்கெட் அச்சீவ் ஆகி விடும்.
 நாளை  இந்த ஆட்டத்தை ஆட உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.

Comments