கள்ளனை நம்பினாலும்...--புல்ஸ்ஸ்ட்ரீட். டி.ஏ.விஜய் இப்படி ஒரு பழமொழியை நீங்கள் நிச்சயமாகக் கேள்விப்பட்டிருந்திருப்பீர்கள்.
 'கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பாதே'
 இந்த பழமொழியைக் கேட்டதும் குள்ளமாக இருக்கிற யாரைப் பார்;த்தாலும் அந்த ஆசாமியை நம்பக்கூடாது.போட்டுக் கொடுக்கும் பேர்வழியாக இருப்பார் என்ற எச்சரிக்கை உணர்வூ உங்களுக்கு வந்திருக்கக் கூடும்.நடைமுறையிலும் உங்களது அலுவலகத்திலும் இது போன்ற சராசரிக்கும் குறைவான உயரமுடைய மனிதர்கள் மேலதிகாரிகளிடம் மற்றவர்களைப் போட்டுக் கொடுப்பவர்களாகவூம் தனது காரியத்தைச் சாதித்துக் கொள்ள என்ன வேண்டுமானாலும் செய்பவர்களாகவூம் இருப்பார்கள்.
 இதையே இப்போது சரியான அர்த்தம் என்ன என்று பார்ப்பதோடு இது ஷேர் டிரேடிங்கில் எப்படி பிரதிபலிக்கிறது என்றும் பார்ப்போம்.
 கள்ளன் என்றால் யார்?
 திருட்டுத்தனம் நிறைந்தவன் கள்ளன்.திருடுபவன்.நாசவேலைகளைச் செய்பவன்.சட்டத்திற்கு புறம்பான காரியங்களைச் செய்பவன்.குறிப்பாக குறுக்குவழியில் முன்னேறிச் செல்பவன்.
 இவனைத்தான் கள்ளன் என்கிறௌம்.
 இது வேறு யாருமல்ல.
 ராகு என்ற கிரகம்தான் இங்கே கள்ளனாகவூம் திருட்டுத்தனம் மிக்கவனாகவூம் குறுக்குவழியில் குபேரனாக்குபவனாகவூம் இருக்கிறான்.
 ஆக ராகுவை நம்பலாம்.
 ராகு உங்களது சுயஜாதகத்தில் எந்த இடத்தில் இருந்தாலும் எத்தனை மோசமான நிலையில் உங்களது ஜாதகத்தில் ராகு இடம் பெற்றிருந்தாலும் ராகுவை நம்பினால் அவன் உங்களை கை விட மாட்டான்.எப்படியாவது சண்டித்தனம் செய்தோ மாய்மாலம் செய்தோ மாயமந்திரம் போட்டது போல குறுக்குவழியில் உங்களை குபேரனாக்கியே விடுவான்.
 அதனால் ராகுவை அவன் எப்படியிருந்தாலும் நம்புங்கள்.
 அதாவது கள்ளனை நம்பினால் கை விட மாட்டான்.
 சரி குள்ளன்?
 உயரம் குறைவானவன்.வெளிச்சமில்லாதவன்.அதாவது இருட்டாக கருப்பாக இருப்பவன்.குள்ளமாக இருப்பதால் மெதுவாக நடப்பவன்.யாரைச் சொல்கிறேன் என்று புரிகிறதா?
 சனி கிரகம்தான் குள்ளன்.
 சனி உங்களது சுயஜாதகத்தில் எந்த நல்ல இடத்தில் இருந்தாலும் ஏன் லக்னாதிபதியாகNவூ இருந்தாலும் அவனை எந்த நல்ல கிரகம் பார்த்தாலும் கூட சனி நம்ப வைத்து கழுத்தறுத்து விடுவான்.அடுத்தவரை ஆட்டிப் படைத்து கஷ்டப்படுத்தி கதற வைப்பதில் சனிக்கு நிகர் சனிதான்.
 சனிதிசையில் படாதபாடு பட்டுக் கொண்டிருப்பவர்களைக் கேட்டால் கதை கதையாகச் சொல்வார்கள்.
 ஆக சனி என்பவன் கெட்டவனே.
 எனவே குள்ளனை நம்பினால் குழி பறிக்காமல் விட மாட்டான்.
 சரி என்ன புரிகிறது?
 எப்படியாவது நேர்வழியில் முன்னேற வேண்டுமென்றால் அதெல்லாம் இந்த கலியூகத்தில் நடக்காது.முடிந்தவரை நல்லவனாக இருப்பதை விட வல்லவனாக ஸ்மார்ட்டாக முன்னேற வேண்டுமென்றால் ராகுவைத்தான் பலமாகப் பிடித்துக் கொள்ள வேண்டும்.
 ராகுவைப் பிடித்துக் கொள்ள வேண்டுமென்றால் அம்மனை வணங்கலாம்.ஆதிசேஷனுடன் கூடிய பெருமாளை வணங்கலாம்.
 சனியை?
 அந்தப் பக்கமே தலை வைத்துப் படுக்க வேண்டாம்.
 இப்போது ஷேர் டிரேடிங்கிற்கு வருவோம்.
 கள்ளனை நம்பினால் கட்டாயம் லாபம் உண்டு.
 ஷேர் டிரேடிங்கில் யார் கள்ளன்?
 திருட்டுத்தனமாகவூம் நேர்மைக்கு எதிரான முறையிலும் ஸ்பெகுலேட்டிவ் தன்மை கொண்டதாகவூம் ஆபரேட்டர்களால் ஏற்றி விடப்படுகிற ஒரு சில பங்குகள்தான் கள்ளன்.அதாவது கள்ளபார்ட் ஷேர்கள்.
 இவ்வித ஆபரேட்டட் மற்றும் ஸ்பெகுலேட்டிவ் ஷேர்களில்(உதாரணம் எய்ஷர் மோட்டார்ஸ்) முதலீடு செய்பவர்களை ராகு கோடீஸ்வரனாக்காமல் விட மாட்டான்.
 சரி குள்ளன் யார் ஷேர் டிரேடிங்கில்?
 அதாவது குள்ளத்தனமாக ஷேர்கள் எவை?
 சின்ன விலையில் டிரேடாகிற மெல்ல மெல்ல நகர்கிற அனைத்து பென்னி ஸ்டாக்குகளும் குள்ளத்தனமான சின்னத்தனமாக பங்குகள்தான்.பத்து ரூபாய்க்கு குறைவான விலையில் கிடைக்கிற(ஸ்பெகுலேட்டிவ் தன்மையல்லாத எந்த ஷேராக இருந்தாலும்) ஷேர்கள் எல்லாமே அதில் நீங்கள் போட்ட முதலீட்டை முழுக்கிக்கொண்டு அப்படியே கிடப்பவை(உதாரணம் ரடான்மீடியா வொர்ஸ் எஸ்ஆர்ஜி இன்ஃபோடெக்)
 ஆக கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பக்கூடாது.

பி.கு:இதில் உதாரணமாக குறிப்பிட்டுள்ள நிறுவனப்பங்குகள் ஒரு சுவாரஸ்யத்திற்காகக் குறிப்பிடப்பிட்டவை.அந்த நிறுவனப்பங்குகள் மீதான ஆய்வாகவோ முதலீட்டுச் சிபாரிசாகவோ நாம் பரிந்துரைக்கவில்லை.நாம் குறிப்பிட்டுள்ள அனைத்தும் டிஸ்க்ளைமருக்குட்பட்டவையே.http://bullsstreetdotcom.blogspot.in

Comments