மாற்றம் ஏற்படுத்தும் மாற்றுதிறனாளி - லலித்குமார் ஒரு பார்வை

       ஏதாவது ஒரு விபத்து ஏற்பட்டு, உயிரை மட்டுமே மிச்சமாக வைத்து எழுந்து நடக்க முடியாமல் போனவர்களின் விபத்துக்கு பிந்தைய வாழ்க்கை முறை பற்றி நாம் யாரும் பெரிதாக கண்டுகொள்வதே இல்லை.  அதுவரை ஓடி, ஆடிய கால்கள் சுயமற்று இருப்பதை மனதால் தாங்கிகொள்ள முடியாமல் இருட்டு அறையில் ஒடுங்கி கிடக்கும் தனது சக மனிதனை பற்றி அக்கறை இல்லாத சுயநல வாழ்விற்கு நடுவே, அவ்வாறான மக்களின் கண்ணீர் துடைக்க தனது சக்கர நாற்காலியில் சுழன்று சுற்றிக்கொண்டிருக்கிறது லலித்தின் கால்கள். ஆம்  அவர் பெயர் லலித்.     நண்பர் "லலித்" பற்றி இங்கே நான் சொல்லியே ஆகவேண்டும். பல நேரங்களில் என்னை பொறாமைபட வைத்தவர். சிந்தனையில், மனதில், உடலில் அவ்வளவு உறுதியான ஒரு மனிதரை எனது அனுபத்தில் முதன் முதலில் லலித்திடம் தான் கண்டேன்.

       "அவரால் சுயமாக எழுந்து நடக்க முடியாது" என்று சொல்லக்கூட என்னால் முடியாது. காரணம் சக்கர நாற்காலியில் செய்யும் அவரது சாகசங்களை கண்டு தான்.

      தன்னை போன்ற பலரையும்( மாற்றுதிறனாளிகள்) எழுந்து நடக்க வைக்க அயாராது உழைத்துக் கொண்டிருக்கிறார். அவரின் கரத்தை வலுபடுத்த நிச்சயம் நாமும் இணைய வேண்டும்.


       முதுகுதண்டுவடத்தில் ஏற்படும் பாதிப்பின் காரணமாக முற்றிலும் இடுப்புக்கு Spinal Cord Injury கீழே செயல் இழந்தவர்களுக்கான மறுவாழ்வு அளித்து வரும் அவரது சேவையில் இணைவதில் எனக்கும் பெருமிதம் தான். 


      இருட்டில் வாழும் அவ்வாறான மாற்றுத்திறனாளிகளை தேடி கண்டுபிடித்து மறுவாழ்வு தரும் அவரது முயற்சியில் வரும் குடியரசு தினத்தில் 26-01-2016 
நிதி திரட்டும் விதமாக, 


     குழந்தைகள், ஆண்கள், பெண்கள், முதியவர்கள் என யார் வேண்டுமானாலும் இந்த கவிதை தொகுப்பில் பதிவு செய்யலாம். குறைந்த பட்சம் 8 வரிகளும் அதிகபட்சம் 35 வரிகளுக்குள்ளும் உங்களது படைப்புகளை பதிவு செய்யலாம். தமிழ், இந்தி, ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் அனுப்பலாம்.

          கலந்துகொள்ளும் அனைவருக்கும் உலகசாதனை நிறுவனமான Assist World Records சான்றிதழ் வழங்குகிறது.


தொடர்புக்கு :

லலித்குமார் நடராஜன்
by phone: 7639142556
https://www.facebook.com/lalithsapriComments