அமைச்சர் செல்லூர் ராஜூவின் அடுத்த ஐடியா!! I Mission Impossible 2 I

அமைச்சர் செல்லூர் ராஜ்ஜூன்னு சொன்னாலே தமிழ்நாடு தாண்டி சைனா வரைக்கும் பிரபலம்ங்க. காரணம் வைகை அணை நீர் ஆவியாகம தடுக்கறதுக்காக அவர் கொண்டு வந்த புதிய திட்டம் தாங்க. ஆமாங்க, வைகை அணைமுழுவதும் தெர்மாக்கோல் போட்டு மூடுன்னா நீர் ஆவியாகம தடுக்க முடியும்னு அதற்கான முன்னோட்டமும் செய்து காட்டினார்.


தலைவர் தன் திருக்கரங்கங்களால் செல்லோடேப்(!) மூலம் இணைக்கப்பட்ட தெர்மாக்கோல்களை வரிசையாக அணையில் உள்ள தண்ணியில் மிதக்க விட்டுட்டு, ஹப்பாடான்னு மூச்ச இழுத்து விடறதுக்குள்ள அத்தனை தெர்மாக்கோலும் காத்துல அடிச்சுட்டு வந்து கறை ஒதுங்கிடுச்சுங்க.

இத்தோடு மனுசன் சோர்ந்து போவாரா என்ன? விடலையே... கிட்டத்தட்ட 10 லட்சம் ரூபாய் இந்த திட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் நீர் ஆவியாவதை தடுப்போம்ன்னு சூளுரையாற்றுனது எல்லாம் நமக்கு நல்லாவே தெரியும்ங்க. இப்ப என்னா செய்தி இருக்குன்னா...  மதுரை/ சோலை அழகுபுரத்தில் டெங்கு விளிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீடு வீடாக விளிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்ட நம்ம செல்லூர் ராஜு அமைச்சர் அவர்கள் செய்தியாளர் சந்திப்பில, மக்கள் அனைவரும் அவங்க அவங்க வீட்டு வாசலில் மாட்டு சாணி தெளிச்சு, சுத்தமா பார்த்துட்டீங்கன்னா டெங்கு கொசுக்கலுக்கு சங்கு ஊதிடலாம்ன்னு அசத்தல் ஐடியாவ அசால்ட்டா தெறிக்க விட்டிருக்கார்.

நல்லவேளை இதுக்கு 20 லட்சம் நிதி ஒதுக்கி மதுரையை கொசுவலையால் மூடும் திட்டம்ன்னு ஒன்ன கொண்டு  வந்து இம்சை பன்னாம, மறந்து வருகிற பாரம்பரிய கிருமிநாசிணிக்கு புத்துயிர் கொடுத்திருக்கிறார்ன்னு மக்கள் மனதார பாராட்டியிருக்கிறார்கள். இனி அடுத்த மிசன் எப்போன்னு ஆவலோடு  எதிர்பார்துட்டு இருக்காங்க