ஜூலி திருப்பி அடிக்க மாட்டாள்ங்கற தைரியமா?

சாதரண குடும்பத்திலிருந்து ஊடக வெளிச்சம் பாய்ச்சப்பட்டு தமிழக மக்களில் பெரும்பாலானோருக்கு அறிமுகம் ஆனவர் ஜல்லிகட்டு ஜூலி.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜூலிக்கு ஆதரவு எதிர்ப்பும் என கலந்தே இருக்கின்றது.

ஒரு சராசரி பெண் புகழ்வாய்ந்த பிரலங்களுடன் சேர்ந்து இருக்கும் ஒரு நிகழ்ச்சியில் நிச்சயாமாக புறக்கணிக்கப்படுவார் என்பதே பொதுவான விதி. 


ஜூலியின் மனநிலையிலிருந்து கொஞ்சம் பாருங்கள். அவள் கொஞ்சம் அதிகபிரசங்கியாக தெரிவதெல்லாம் அவளின் போராட்டத்திற்கான வலியிலிருந்து வெளியேறிய காரணிகள் மட்டும் தான். தன் இயல்பிலிருந்து அவள் மாறத்துவங்கிய நாட்களில் அவளுடன் உடனிருந்தவர்களின் நடை, உடை, பாவனைகளுமே அவர்களின் ஒப்பனைகளுமே காரணாகியிருப்பதை நீங்கள் உணரக் கூடும். நீங்கள் எதை விரும்பியிருக்கின்றீர்களோ அதை அவள் செய்ய விரும்பியிருக்கிறாள். அதன் விளைவே எல்லை தாண்டி அவளின் பர்சனாலிட்டியை நெகட்டிவாக காமித்திருக்கிறது.

ஜூலி உங்களுடன் வாழ்பவள். அவளுக்கு ஊடக திரிபு வார்த்தைகளும், பிரபலங்களின் வேடிக்கை வாழ்க்கையும் தெரிய வாய்ப்பில்லை என்பதை உணருங்கள்.

சிறிய தவறை பூதக்கண்ணாடி கொண்டு பெரிதாக்கி அவளின் வரும் நாட்களை நீங்கள் தீர்மானிக்காதீர்கள்.


காணொளி பார்க்க

ஜூலி - அனுசரிக்கப்பட வேண்டியவள்.
-தொழிற்களம் அருணேஸ்