தனிநாடு வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது கட்டலோனியா

உலகின் பல இனங்களும் தங்கள் தனிநாடு கோரிக்கைக்காக போராடி வரும் இந்நிலையில் ஸ்பெயின் நாட்டின் ஒரு பகுதியாக இருந்த கட்டலோனியா பொதுவாக்கெடுப்பு நடத்தி 90% பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.ஸ்பெயின் நாட்டிம் மொத்த பொருளாதாரத்தில் ஐந்தில் ஒரு பங்கு கட்டலோனியா பகுதியில் இருந்து கிடைக்கிறது. தொடர்ந்து தனி நாடு கோரிக்கைக்காக அம்மக்கள் குரல் கொடுத்து வந்தனர். ஸ்பெயின் அரசாங்கம் அதனை ஏற்க மறுத்து போராட்டங்களை ஒடுக்கி வந்தது.


இந்நிலையில் கட்டலோனிய "மாநில அரசு" பொதுவாக்கு எடுப்பதாக அறிவித்து நடத்தியும் காட்டி வெற்றி பெற்றுள்ளது. ஸ்பெயின் காவல்துறையை ஏவி வாக்கெடுப்பை தடுக்க தடியடியும் நடத்தியது. அதில் ஏராளமான மக்கள் படுகாயம் அடைந்தனர். இதற்கு உலக நாடுகள் பலவும் கkண்டனம் தெரிவித்திருக்கின்றன.


பொதுவாக்கில் தனிநாடு கோரிக்கையில் வெற்றி பெற்றதன் மூலம் கட்டலோனியா தனி கவனம் பெற்றுள்ளது என்பது மறக்க முடியாத உண்மை.

இறுதியில் ஜனநாயகமே வெல்லும்.