வீட்டில் செல்வம் பெருக எந்த திசையில் விளக்கு ஏற்ற வேண்டும்?

ஒவ்வொருவர் வீட்டிலும், மனதிலும் இருள் நீங்கி ஒளி பரவ வேண்டும் என்பதன் உட்பொருளை தாங்கி, எல்லாம் வல்ல இறைவனை போற்றுவதற்கான அடையாளமாக ஏற்றப்படுவதே தீபம்.

புதிதாய் திருமண ஆன மருமகளை "விளக்கேற்ற வந்தவள்" என்று சொல்வது நம் தமிழ் மரபுகளின் வழி வந்த வழக்கமே!

இவ்வாறு நமது வீடுகளில் விளக்கு ஏற்றி வைப்பதில் திசைகளுக்கும் பெரும் பங்கு இருக்கிறது


கிழக்கு திசை :
இத்திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் துன்பம் நீங்கும், பீடைகள் வீட்டை விட்டு நீங்கும்

மேற்கு திசை :
கடன் தொல்லையிலிருந்து மீண்டு வர மேற்கு திசை நோக்கி விளக்கேற்றுவது பலன் தரும். மேலும், சனி, பிணி, சர்வ கிரக தோஷங்களும் அகலும்

வடக்கு திசை :
வீட்டில் மகிழ்ச்சி நிலைத்திருக்கவும், செல்வம் நிறைந்திருக்கவும் வடக்கு திசையில் தீபம் ஏற்றுவது நல்லது. நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருக்கும் வீட்டார்கள் வடதிசையில் தீபம் ஏற்றுவதால் திருமண தடை நீங்கு சுபகாரியங்கள் இனிதே நடந்தேரும்.

தெற்கு திசை :
இத்திசையில் தீபம் ஏற்ற கூடாது. இது பெரும்பாவம் ஆகும். தவிர்த்து விடுங்கள்.

மேற்குறிப்பிட்ட திசைகளின் பலன்கள் வீடுகள், ஆலயங்கள், கூட்டு வழிபாடுகள் அனைத்திற்கும் பொருந்தும்.

Comments