கமலின் அரசியல் பிரவேசத்தை தடுக்கிறாரா சங்கர்?
கமலின் அரசியல் பிரவேசத்தை தடுக்கிறாரா சங்கர்?

  சமீபத்தில் பல்வேறு ஊடகங்களில் பத்மஸ்ரீ கமல்ஹாசன் அவர்கள் பேட்டிகள் வெளியாகி அவர் நிச்சயமாக அரசியலில் நுழைகிறார் என்பதை தெளிவுபடுத்தியிருக்கின்றன. இந்நிலையில் டைரக்டர் சங்கர் அவர்களில் இயக்கத்தில் கமல் நடிப்பதாக இருக்கும் இந்தியன் 2 திரைப்படத்தால் அவரின் அரசியல் பிரவேசத்தில் தாமதம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.


 கடந்த சில மாதங்களாக கமல் அவர்களின் டிவிட்டர் பதிவுகள் ஆளும் கட்சி - எதிர்கட்சி என பாரபட்சம் இல்லாமல் அனைவரையும் கடுமையாக விமர்சித்து வந்தன. இதனால் பல ஆளும்கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் பலரும் நேரடியாக கமலின் அரசியல் விமர்ச்சன கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மறைவிற்கு பிறகு ஏற்பட்ட அரசியல் குளருபடிகளால் தமிழகத்தில் மக்கள் கமலின் அரசியல் பிரவேசத்தை அதிக அளவில் எதிர்பார்த்து வருகின்றனர். கமலும் அதை உறுதிபடுத்தும் விதமாக 100நாட்களுக்குள் கட்சியின் கொள்கை, பெயர் போன்ற அனைத்தையும் வெளியிட இருப்பதாக தெரிவித்திருந்தார். மேலும் அரசியலுக்கு நுழைந்த பிறகு சினிமாவில் நடிக்கப்போவதில்லை என்றவாறும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்தியந் 2 வில் நடிப்பதையும் உறுதிபடுத்தியிருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் கிரேன் பைனாலேவில் சங்கரும் கலந்துகொண்டு இதை உறுதிபடுத்தினார். 


   இவ்வாறிருக்க, இந்தியன் 2 வில் கமல் நடிப்பதாக இருந்தால் கட்சியின் கட்டமைப்பை எப்போது செய்வார்? அரசியல் பிரவேசம் என்பதை வெறும் விளம்பர யுக்திதானா என்ற பல்வேறு கேள்விகளுக்கு பத்மஸ்ரீ தான் விரைவில் விளக்கம் அளிக்க வேண்டும். தயவால் வெகுள்வாய் தமிழா!!?