காந்திய வழியில் கோடிகளைக் குவிப்பது எப்படி?


  காந்திக்கும் கோடிக்கணக்கான பணத்திற்கும் என்ன சம்பந்தம்? அ.க்கும் அ.க்கும் என்ன சம்பந்தம் என்பது போல இதென்ன தலைப்பு என்று நீங்கள் யோசிக்கலாம்.மகாத்மா காந்திக்கும் கோடிக்கணக்கான பணத்திற்கும் சம்பந்தம் இருக்கிறது.ஏனென்றால் ரூபாய் நோட்டில் இருப்பதே அந்த புன்னகை மன்னன்தானே!
  காந்திய வழியில் கோடிகளைக் குவிக்க முடியூமா என்றால் நிச்சயம் முடியூம்.அதைத்தான் சொல்ல வருகிறேன்.காந்திய வழி என்றால் அறம் எளிமை சுதேசி அகிம்சை போன்றவைதான் உடனே நினைவூக்கு வருகின்றன.இந்த பண்புகளைப் பங்குச்சந்தையில் எப்படிப் பயன்படுத்துவது என்று பார்ப்போம்.
  "காந்திய வழியில் ஒரு போர்ட்ஃபோலியோ"
 பெரிய பெரிய பங்குகளின் பின்னால் போகாமல் பெரிய பெரிய பன்னாட்டு நிறுவனப் பங்குகளின் பின்னாலும் போகாமல் நமது நாட்டில் உள்ள நம் நாட்டு நிறுவனப் பங்குகளை வைத்துக் கொண்டு ஒரு போர்ட்ஃபோலியோ செய்யலாம்.பெரிய பங்குகளே வேண்டாம்.சின்னச் சின்ன பங்குகள் போதும்.சின்னச் சின்ன பங்குகள்தான் சில வருடங்களில் மிகப்பெரிய பங்குகளாக வளர்ச்சியடைந்துள்ளன என்பது கடந்த கால வரலாறு.இப்போது அதனை எப்படி அமைப்பது என்று ஆராய்வோம்.

1.சின்னச் சின்ன விலைகளில் கிடைக்கிற அதாவது ஒரு ரூபாய் முதல் இருபது ரூபாய் வரையிலான விலைகளில் கிடைக்கிற சின்னச் சின்ன பங்குகளே போதும்.

2.பத்து பங்குகள் போதும்.வதவதவென்று பங்குகளை வாங்கி வைத்து அடைகாக்க வேண்டாம்.சின்னச் சின்னதாய் பத்து பங்குகள் போதும்.

3.உள்நாட்டுத் தயாரிப்புகளான சுதேசி நிறுவனப் பங்குகளாக அவை இருக்கட்டும்.

4.உடல் நலத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிக்கிற பொருட்களைத் தயாரிக்கிற பங்குகளை தவிர்த்து விட்டு நல்ல பொருட்களை தயாரிக்கிற நிறுவனப் பங்குகளாக அவை இருக்கட்டும்.

5.இது போன்ற பத்து பங்குகளை தேர்ந்தெடுத்து வாங்கியபின்னர் அகிம்சை வழியை கடைபிடிக்க வேண்டும்.அதாவது வாங்கிய பங்கின் விலை ஏதோ காரணத்திற்காக விலை குறைந்தால் உடனே விருட்டென்று அவற்றை விற்று விட்டு வேறு பங்குகளின் பின்னால் ஓடாமல் ஒரு முறை வாங்கிய பங்குகளை அப்படியே சில வருடங்கள் வைத்திருக்க வேண்டும்.அப்போதுதான் அவை பெரிய அளவில் வளரும்போது நல்ல லாபத்தை அடைய முடியூம்.

6.சுமார் ஒரு ரூபாய் முதல் இருபது ரூபாய் வரை உள்ள விலைகளில் வாங்கிய பங்குகள் இருநுரறு ரூபாய்க்கும் மேலாகச் செல்லும்போது உடனே விற்று அந்த பணத்தில் ஆடம்பரப் பொருட்களை வாங்காமல் அந்த பணத்தில் மறுபடியூம் சின்ன விலைகளில் கிடைக்கிற பங்குகளாக வாங்கி வைத்துக் கொள்ளக் கூடிய "எளிமை"யை கடைபிடிப்பதும் அவசியம்.

7.முடிந்தவரை கிராமப்புற மேம்பாட்டிற்கான பொருட்களை தயாரிக்கும் அல்லது அவ்வித சேவைகளை மேற்கொள்ளும் நிறுவனப் பங்குகளில் சிலவற்றையூம் வாங்கி போர்ட்ஃபோலியோவில் சேர்த்துக் கொள்வதும் உங்களது சமுதாயக் கடமை என்று உணருங்கள்.

  அப்புறமென்ன.சின்னச் சின்ன பங்குகள்தான் எதிர்காலத்தில் ஆயிரங்களை லட்சங்களாக்கி லட்சங்களை கோடிகளாக்கித் தரும் அட்சயப் பாத்திரம் என்பதை உணருங்கள்.அதனை காந்திய வழியில் செய்து பாருங்கள்.நல்லது நடக்கும்.
 வாழ்த்துக்கள்!
 வாழ்வோம் வளமுடன்!
For More Details,Click here------------------>