டெலிகாம் ...தொடர்பு எல்லைக்கு வெளியே....


  சில மாதங்கள் முன்பாக இன்ட்ரா டே டிரேடர்களுக்கு பணத்தை அள்ளி அள்ளிக் கொடுத்துக் கொண்டிருந்த டெலிகாம் பங்குகள் தற்போது மௌனம் சாதித்;துக் கொண்டிருக்கின்றன.இதற்கு காரணம் ஜியோவின் ஆளுமை மற்றும் டிராயின் கெடுபிடி.தனித்தனியாக இயங்குவதற்கு பதில் ஒன்றாக இணைந்து கூட்டாஞ்சோறு சமைக்கலாம் என்றாலும் அதுவூம் குழைந்து போகிறது.
  ஒரு பக்கம் ஆர்காம்-ஏர்செல் டீல் டீலில் முடியாமல் இழுத்துக் கொண்டு போகிறது.அண்ணன் அட்டகாசம் செய்ய தம்பி தவித்துக் கொண்டிருக்கிறார்.இன்னொரு பக்கம் ஐடியா-வோடஃபோன் டீல் தள்ளிக் கொண்டே போய்க்கொண்டிருக்கிறது.இது மார்ச்சிற்கு மேல்தான் படியூம் போலத் தெரிகிறது.
  பார்திஏர்டெல் தனி ஒருவனாக கலக்கிக் கொண்டிருந்த காலகட்டம் முடிந்து விட்டது.இன்ட்ரா டேயில் என்றைக்காவது ஒரு நாள் மட்டும் முகத்தைக் காண்பித்து விட்டு மற்ற நாட்களில் பதுங்கிக் கொண்டு விடுகிறது.
  இப்போதைக்கு டெலிகாம் பங்குகளை தள்ளி வையூங்கள்.அதற்கு பதிலாக  இன்சூரன்ஸ் பங்குகளில் கையை வையூங்கள்.ஏனென்றால் இன்னும் கொஞ்ச காலத்திற்கு காப்பீட்டுப் பங்குகளின் காட்டில்தான் மழை பெய்யப்போகிறது.இன்றைய தினம் லிஸ்ட் ஆகியிருக்கும் எஸ்பிஐ இன்சூரன்ஸ் பங்கு 5 சதவீத உயர்வை கண்டிருக்கிறது.

 <--------------------for more stock alerts,news,tips and guidance Click here----------------->