வாட்சப் மூலம் வீட்டிலிருந்தபடியே பணம் சம்பாதிப்பது எப்படி?

  ஸ்மார்ட்போன் வந்ததுக்கு பிறகு வாட்சப் பயனர்கள் பெருமளவில் அதிகரித்து விட்டனர். மிக எளிமையான மற்றும் வேகமான Messanger Apps ன்னா அது வாட்சப் தாங்க.

வாட்சப் மூலம் பணமும் சம்பாதிக்க முடியும் என்றால் ஆச்சரியமா இருக்கா? உண்மை தாங்க. கொஞ்சம் பொறுமையும், கொஞ்சம் திறமையும் இருந்தா போதுங்க வாட்சப் மூலமாகவே உங்களால் நல்ல வருமானம் ஈட்ட முடியும்.

சக்சஸ்புல்லான இந்த ஐந்து விதமான வருமானம் வரும் வழிகளை Step by Steps ah தெரிஞ்சுக்கலாம் வாங்க
  • URL Shortening Services
  • Affiliate Marketing
  • Using PPD Networks
  • Referring Recharge Apps
  • Own Branding Business 
#1. URL link shortening services
    ரொம்ப ஈஸியான மற்றும் அதிக வருமானம் ஈட்டக்கூடிய வழி இது தாங்க.  URL SHORTENNING -  ஓவ்வொரு இணைய தளத்திற்கும் தனி இணைய முகவரி ஒன்னு இருக்கும். அது அந்த வெப்சைட்ல இருக்குற ஒவ்வொரு பக்கத்திற்கும் (செய்தி) தனி தனியா கொஞ்சம் நீளமா இருக்கும். உதாரணமா,  தினமலர் பத்திரிக்கை இருக்கும்ன்னு வைங்க, அதுல கமல் கட்சியை அக்டோபரில் தொடங்குகிறாரா? ன்னு ஒரு செய்தி வந்திருக்குன்னா அதற்கான URL :  https:dinamalar.com/kamal-start-new-party-on-October  ன்னு நீட்டி முலங்கி இருக்கும். மொபைல் யூசர்ஸ் அதிகமான இந்த காலத்தில இப்படி உக்காந்து டைப் பன்னி ஒவ்வொருத்தரும் அந்த பக்கத்துக்கு போவாங்களா? கொஞ்சம்  கஷ்டமா இருக்கும்ல?

   இந்த பிரச்சனையை தீர்க்க சில நிறுவனங்கள் URL Shortening Service கொடுக்குறாங்க. அந்த தளங்களில் வெப்சைட் ஓனர்ஸ் தங்களோட லிங்க்க அப்டேட் பன்னி அத சார்ட்டா மாத்தி பயன்படுத்திக்குவாங்க. அதேபோல அந்த லிங்க்க புரமோட் பன்னுவதற்கு அவங்க பணத்தை அள்ளி தருவாங்க.

    நாம செய்ய வேண்டியது வெரி சிம்பில்ங்க. அந்த மாதிரியான UURL Shortening Service பன்ற வெப்சைட்டில் ரிஜிஸ்டர் பன்னிட்டு அவங்க கொடுக்குற லிங்க்க  நாம, நமக்கு தெரிஞ்சவங்களுக்கு வாட்சப் மூலமா அனுப்பனும். அப்படி நீங்க அனுப்புன லிங்க்க, ரிசிவர் கிளிக் பன்னி ஓபன் செஞ்சார்ன்ன உங்களுக்கு கிளிக்குக்கு இவ்ளோன்னு URL Shortening கம்பெனி பணம் கொடுப்பாங்க. #2. Affiliate Marketing
   நீங்க  ஆன்லைனில் அதிகமா பொருள் வாங்கிறவரா இருந்த  அப்ளியேட்ங்குற வார்த்தைய அதிகமா கேட்டிருப்பீங்க. ஆமாங்க, பிரபல சாப்பிங் கார்ட் நிறுவங்கள் அனைத்துமே அப்ளியேட் மூலமா வருமானம் ஈட்ட நிறைய வாய்ப்புகளை அள்ளி தருகின்றன. அமேசான், பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்களின் அப்ளியேட் யூசரா இணைந்து அவங்களோட புரோடக்ட வாட்சப்பில் இருக்குற உங்க பிரண்ட்ஸ் அனைவருக்கும் அனுப்புங்க. நீங்க அனுப்புற லிஙக் மூலமா யாராவது பொருள் வாங்குனாங்கன்ன  உங்களுக்கு அதன்  மூலம்  12% வரை அப்ளியேட் இன்கம் கிடைக்கும். தளங்களுக்கு தளம் வருமானம் வேறுபடலாம். இருந்தாலும் அப்ளியேட்டட் ஒரு வெற்றிகரமான இணைய வருமானம் ஈட்டும் வழி என்பது மிகையாகாதுங்க .


#3. Using PPD networks


டவுன்டோடு பன்னுற ஓவ்வொரு, வீடியோ, சாங்க்ஸ், சாப்ட்வேர்ன்னு எதுவா இருந்தாலும் அதற்கேற்றார் போல வருமானத்தை தரும் தளங்கள PPD ன்னு சொல்லுவாங்க. (PPD -PAID PER DOWNLOAD)


இத்தகைய தளங்களில் போதுமான அளவுக்கு வருமானத்தை அடையனும்ன்ன நீங்க வாட்சப் குரூப்கள் பலவற்றில் இணைஞ்சுக்கங்க. மிக அதிக அளவில் நீங்க பார்வேடு பன்னுனா நிச்சயம் நல்ல இன்கம் கிடைக்கும்
#4.Referring Recharge Apps


     மொபைல், DTH ரீசார்ச் செய்ய பிளே ஸ்டோரில் எக்கசக்கமான Apps இருந்தாலும் PayTM Cash, Taskbucks போன்ற நம்பத்தகுந்த சில நிறுவங்களின் சேவை சிறப்பகாக இருக்கிறது.

இத்தகைய ஆப்களில் கூடுதல்  வசதி என்னன்ன நம்ம Reference  மூலமா வேற யாராச்சும் ரீசார்ச் பன்னுனா நம்ம வாலட்டில் கமிசன் தொகை ஏறும். இதுவும் Referral மார்கெட் வேலை தான் என்றாலும், அவசரத்துக்கு பணம் தேவைன்ன இத்தகைய Reference Option பயன்படுத்தி உடனடியாக சிறிதளவு வருமானத்தை ஈட்டலாம். ஆனா நீண்ட காலம் இது பலனளிக்காது.

  பிளே ஸ்டோரில் PayTM Cash, Taskbucks  டவுன்லோடு செய்து பயன்படுத்துங்கள்.


#5.Own Branding Business 

    உங்களுடைய சொந்த நிறுவனத்தின் பொருட்கள் அல்லது மார்க்கெட்டில் மொத்த விலைக்கு கிடைக்கும் பொருட்களை உங்க பிரண்ட்ஸ், ரிலேட்டிவ்ஸ்ன்னு அறிமுகம் செஞ்சு தகவல்களை அனுப்பு சுயமாக தொழில் துவங்க வாட்சப் சிறந்த வழி.

இந்தியாவில் குஜராத், ராஜஸ்தான், திருப்பூர், சேலம், ஈரோடு போன்ற பகுதிகளில் உற்பத்தியாளர்கள் பலரும் தங்களுடைய கேட்லாக்க ரீடெய்லர்களுக்கு அனுப்பி வைக்கறாங்க. உங்க பிரண்ட்ஸ்கு அத அனுப்பி அவங்களுக்கு அந்த பொருள் பிடிச்சுன்ன உற்பத்தியாளரிடம் பணம் செலுத்தி மொத்த விலைக்கு வாங்கி அதை நீங்க ஒரு லாபத்துடன் விற்பனை செய்யலாம்.

சேலை, சுடிதார், சர்ட்ன்னு மட்டும் இல்லாம கேன்பேக், செப்பல்ஸ்  மற்றும் ஆர்கானிக் விளைபொருட்கள் வரை நீங்க மார்கெட்டிங் செய்து வருமானம் பெறலாம்.