சிறு மெக்கானிக்குகளை புதிய வாகன சட்டம் படுத்தும்பாடு

சிறுதொழிலாக டூவிலார் மெக்கானிக் வேலைகள் சுயமாக செய்துவரும்  பலரையும் புதிய மோட்டார் வாக சட்டம் சிக்கலுக்கு உண்டாக்குகிறது என வருத்தம் தெரிவிக்கின்றனர் மெக்கானிக்கள்


இதுபற்றி சேலம் மாவட்ட மோட்டார் பைக் மெக்கானிக்குகள் சங்கத் தலைவர் கூறுவது 'பைக் மெக்கானிக்குகள் தொழில் அனுபவம் அல்லது ஐ.டி.ஐ முடித்துவிட்டு வேலை கிடைக்காதபட்சத்தில், ஒரு சிறிய இடத்தை வாடகைக்கு எடுத்து மெக்கானிக் வேலை செய்கிறோம். இதில் பெரிய வருமானம் கிடையாது. இது ஒரு குடிசை தொழில்போல செய்துகொண்டிருக்கிறோம். ஆனால், 

புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின்படி இருசக்கர மோட்டார் வாகனம் பழுதுபார்க்கும் ஒர்க்‌ஷாப் வைக்கக்கூடியவர்கள் சொந்தமாக 2,000 சதுர அடி நிலம் இருக்க வேண்டும். 

சொந்த இடத்தில் ஒர்க் ஷாப் வைத்திருக்க வேண்டும். 

எந்த கம்பெனி வண்டியை சர்வீஸ் செய்கிறோமோ அந்த கம்பெனியிடம் பதிவு செய்திருக்க வேண்டும்.


ஒர்க் ஷாப்பில் வேலைபார்க்கும் ஊழியர்களுக்கு இ.எஸ்.ஐ., பி.எஃப்., ஒர்க் ஷாப் உரிமையாளர் போட வேண்டும். 

ஒர்க் ஷாப் வைப்பதற்கு ஆர்.டி.ஓ அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். அப்படி பதிவு செய்தவர்கள் மட்டுமே இருசக்கர வாகனங்களைப் பதிவு செய்ய முடியும். 

இது போன்ற பல கண்டிஷன்கள் போடப்பட்டுள்ளதாக  தெரிகிறது. இந்தத் தகவல்கள் அனைத்தும் ஆதாரமற்றவை என்றாலும், ஒர்க்‌ஷாப் பணியாளர்களை மிகவும் கவலையடையச் செய்கிறது

Comments