ஒரே ஒருவர் மட்டும் வாழும் வித்தியசமான நாடு

கிட்டத்தட்ட 5.10 லட்சம் ஏக்கர் பரப்பளவுள்ள நிலப்பகுதியையை தானே மன்னராகவும், தளபதியாகவும் நியமித்துள்ள ஒரு இந்தியர பத்தி தெரிஞ்சுக்கலாம் வாங்க...

ஆப்ரிக்க நாடுகளாக எகிப்து மற்றும் சூடான் எல்லையில் அமைந்துள்ளது பிர் தாவில் என்ற, 2,060 சதுர கி.மீ., பரப்பளவு உள்ள பகுதி. எகிப்து, சூடான் இடையே, 1899ல் நிலப்பரப்பு நிர்ணயிக்கப்பட்டபோது, உலகில் மக்களே வசிக்காத அந்தப் பகுதியை இரு நாடுகளுமே சொந்தம் கொண்டாடவில்லை.

அதையடுத்து, 5.10 லட்சம் ஏக்கர் பரப்பளவு உள்ள அந்த நிலப் பகுதி, எந்த நாட்டுக்கும், யாருக்கும் சொந்தமில்லை என்று வரையறுக்கப்பட்டது. மிகுந்த மோசமான வானிலை, முழுவதும் பாலைவனம், கற்கள் நிறைந்த இந்தப் பகுதியை, 'மனிதர்கள் வாழலாம். ஆனால் யாருக்கும் உரிமை கிடையாது' என அறிவிக்கப்பட்டுள்ளது. 

டெக்னாலஜி மற்றும் புகைப்படத்துறையில் ஆர்வம் கொண்ட சுயாஸ் தீட்சீத் என்னும் குறும்புக்கார இளைஞர் இந்த பகுதிக்கு சென்றுள்ளார். அந்த பகுதியை முழுவதும் தன்னுடையது என்று சொல்லி, தானே அந்நாட்டின் மன்னர் என்றும் ராணுவ தளபதி என்றும் பிரகடனம் செய்தார்.

ஏற்கனவே இது தனக்கு சொந்தம் என்று பலரும் ஐநாவில் அனுகியிருந்தாலும் சுயாஸ் தன் நாட்டிற்கான கொடியையும் அறிமுகம் செய்து ஐநாவில் அனுமதிக்காக வின்னப்பித்திருக்கிறார் என்பதே சுவராசியம்.

தன் நாட்டிற்கு தீட்சித் ராஜ்ஜியம் என்றும் அதன் தலைநகர் சுயாஸ்பூர் என்றும் அறிவித்திருக்கிறார்.

தனிக்காட்டு ராஜா என்பது உண்மையில் சுயாஸ் தீட்சித் விசயத்தில் நிறுபனமாகியுள்ளது.

Comments