இனி சொத்துக்கள் வாங்குவதற்கு ஆதார் கட்டாயமாக்கப்படும்

ரியல் எஸ்டேட் துறையில் அதிக அளவில் கருப்பு பணம் குவிந்துகிடக்கிறது என்பதை நன்கு உணர்ந்துள்ள மத்திய அரசு சமீப காலமாக அதிக கவனத்தை இதில் செலுத்தி வருகிறது.


இதனடிப்படையில், ஊழல் மற்றும் கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக இனி அசையா சொத்துக்கள் வாங்குவதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்படும் எனும் புதிய சட்டத்தை விரைவில் மத்திய அரசு கொண்டு வர இருக்கிறது.

பினாமி சொத்துகள் வாங்கி குவிக்கும் பண முதலைகளுக்கு இதன் மூலம் பலத்த அடி விழும் என்பது நிதர்சனமான உண்மையே. வேறொருவரின் கணக்கில் சொத்துக்கள் வாங்கி குவித்தாலும், அந்நபரின் இன்கம் சோர்ஸ் பற்றி வருமான வரித்துறை கிடுக்கிபிடி போடும் என்பதால் அதிக அளவில் பண பதுக்கல் என்பது ரியல் எஸ்டேட் துறையில் தடுக்கப்படும்.


வெளிநாட்டில் வாழ்பவர்கள் இந்தியாவில் சொத்துக்கள் வாங்க வேண்டும் என்றால் ஆதார் இல்லாமல் வாங்க மாற்று வழி என்ன அதில் உள்ள ஓட்டைகள் பற்றியும் தீர ஆராய்ந்து மத்திய அரசு இத்திட்டத்தை கொண்டு வந்தால் சிறப்பு. ஏற்கனவே வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்க வேண்டும் என்ற கட்டாயத்தின் போது Form 60 ஐ இணைப்பதின் மூலம் வங்கி கணக்கை வெளிநாடு வாழ் இந்தியர்கள் சிரமமின்றி தொடர முடிந்தது. அதுபோல சில விதிவிலக்கு ஊழல்வாதிகளுக்கு சாதகமாகிவிடக்கூடாது என்பதே பொதுமக்களின் கவலை.

Comments