போக்குவரத்துக் கழகம் நட்டத்தில் இருக்கிறதா? உண்மை நிலை என்ன?

போக்குவரத்து துறையின் நஷ்டம் என்பது வெறும் மேம்போக்காக சொல்லப்பட்டாலும் அதன் உள்ளார்ந்த காரணங்களை தீர அலாசியே ஆக வேண்டும்.

வெறும் பயணிகளிடம் வசூலிக்கப்படும் தொகையை வைத்து நடத்துனர், ஓட்டுனர்களின் சம்பளத்தை கொடுக்க கூட முடியாதா? என்ற பார்வையை தவிர்த்து, ஒரு பேருந்தானது தனது வழித் தடத்தில் சிக்கல் இல்லாமல் செல்லுவதில் இன்னும் பலரது உழைப்பும் மிஞ்சியிருக்கிறது. டிப்போவின் பராமரிப்பு, பணியாளர்கள் போன்ற சில்லரை காரணங்களையும் கூடவே இணைத்துக்கொள்ளலாம்.


முக்கியமான காரணமாக, இழப்பீட்டு தொகை வழங்கவதால் ஏற்படும் நஷ்டத்தை தான் அரசால் சமாளிக்க முடியவில்லை என்கிறார்கள். மோட்டார் வாகன விதிகளின்படி அனைத்து பேருந்துகளும் இன்சூரன்ஸ் முறையாக செலுத்தப்படுகிறதா(!)? என்றால் நிச்சயம் இல்லவே இல்லை என்ற பதில் தான் வருகிறது.

சாதரணமாக, 10000 ரூபாய்க்கு மதிப்பு இருந்தாலும் இன்சூரன்ஸ் பேப்பர் காட்டு என மிரட்டும்(?) அதிகாரிகள் ஏன் அரசு போக்குவரத்து கழகத்தை கேள்வி கேட்பதில்லை?

மிகவும் இலாபம் தரக்கூடிய தொழிலாக போக்குவரத்து துறையாக மாற்ற யோசிக்காமல் மக்கள் மீது சுமையை செலுத்தி மாறி மாறி அதிமுகவும், திமுகவும் தொடர்ந்து ஏமாற்றி வருகிறார்கள்.


இதற்கான தீர்வுகள் பல இருக்கின்றன..
முறைபடுத்தப்பட்ட(?) GST இருப்பதால் பேருந்துகளில் ஏன் லாஜிஸ்டிக்ஸ் அனுமதிக்க கூடாது? மிகப்பெரிய நெட்வொர்க்கிங் இருக்கும் இத்துறையில் நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் பார்சல்களை புக்கிங்க் செய்து டெலிவரி செய்தால் இன்னும் இருமடங்கு லாபம் நிச்சயமாக சம்பாதிக்க முடியும்.

அரசின் சுற்றுலா பேருந்துகள் இருக்கிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும்? முறையாக மக்கள் இதனை பயன்படுத்த வழி வகை இருக்கிறதா?

அத்தனை பேருந்துகளிலும் பின்புறம் விளம்பரம் செய்ய நிச்சயம் நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன. ஆனால் அலைய முடியததால் பின்வாங்குகின்றன. முறையாக கொடுங்களேன்??

இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வானத்திலிருந்தா இலாபம் ஈட்டுகிறது? இலட்சக்கனக்கான ஊழியர்களின், பேருந்துகளின் மீதான இன்சூரன்ஸ் பணத்தை அவர்கள் அனுமதி இல்லாமல் தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்வது ஏன்??

இதையெல்லாம் முறையாக செய்தாலே இன்னும் கட்டணத்தை குறைத்து கொடுத்தாலும் கூட போக்குவரத்து கழகம் இலாபகரமாக இயங்க வைக்க முடியும்.

பாசத் தலைவன்(?)க்கு பாராட்டு விழாவும், புரட்சி தலைவருக்கு நூற்றாண்டு விழாவும் கொண்டாடிக்கொள்ளும் திமுக/அதிமுக அரசுகளுக்கு மக்கள் பற்றிய அக்கறை இவ்வளவு தான் வாக்காளப் பெருங்"குடி" மக்களே!!

எவனோ ஒருவன் உல்லாசமாக வாழ்வதற்கு உங்கள் இரத்தத்தை கொடுக்கின்றீர்கள் என்பதை உணர்ந்துகொண்டு அடுத்த முறை வாக்களியிங்கள். வேறென்ன நான் சொல்ல?
#தொழிற்களம்_அருணேஸ்

Comments