பெட்டிக்குள் குட்டியிடும் பணம் - "இன்சூரன்ஸ்" தெரிந்த செய்திகளும் தெரியாத தகவல்களும்

     முதல் அத்தியாயத்திற்கு போகும் முன்பு உங்களுக்கு ஒரு வாக்குறுதியை நான் தருகிறேன். இந்த தொடரை முழுமையாக வாசிச்சு முடிக்கும் போது, உங்ககிட்ட ஒரு புதிய அலாவுதீன் பூதத்தை நான் கொடுத்திருப்பேன். அந்த அலாவுதீன் பூதம் உங்கள் பணத்தை நீங்க விரும்புற மாதிரி குட்டி போட வைக்கும். உங்களுக்கு எப்பெல்லாம் தேவைகள் ஏற்படுதோ அப்பெல்லாம் அந்த அலாவுதீன் பூதத்தை நீங்க பயன்படுத்திக்கலாம். அதுக்கு நான் கேரண்டி!!!!


   பொதுவா "பணம் பன்னும் கலையை" நீங்க தெரிஞ்சுக்கனும்ன்னா பணத்தை செலவழிக்கறது எப்படிஙகறத தான் முதல்ல தெரிஞ்சுக்கனும். ஏன்னா பணத்தை எல்லோராலும் ஈஸியா சம்பாதிக்க முடியும்ங்க. ஆனா, அத செலவு பன்ன ஆசைப்படும் போது ஒன்னு உங்க பணம் உங்க கையில் இருக்காது அல்லது அந்த பணத்தை செலவு செய்ய உங்க உடம்பு ஒத்துழைக்காது.

  22வது வயசுல காலேஜ் முடிச்சதும் கேம்பஸ்ல பஸ்ட் கிரேட் வாங்கி நம்ம சங்கர்நாரயணன் பெங்களூருக்கு போய் செட்டில் ஆனாரு. அடுத்த ஐஞ்சாவது வருசம் கல்யாணம், அடுத்த வருசமே குழந்தை அப்றம் அடுத்த குழந்தைன்னு வரிசையா சராசரி வாழ்க்கைக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தன்னோட சம்பள பணத்துல செலவு செஞ்சுகிட்டு நிம்மதியான வாழ்க்கை(?)ந்னு நம்பி நம்மாளு வாழ்ந்திட்டு இருந்தாரு.

   பசஙகள ஸ்கூல்ல சேர்க்கும் போது தான் தலைவருக்கு சுர்ர்ன்னு பட்டுச்சு.. அடடே மேரேஜ்க்காக ஆபிஸ்ல வாங்குன லோன்னே இன்னும் முடில இப்ப ஸ்கூல் பீஸ் லட்சதுல எப்படி கட்டி சமாளிக்க போறேனோன்னு கொஞ்சம் யோசிக்க ஆரம்பிச்சாரு. எப்படியோ கொஞ்சம் பொண்டாட்டியோட நகைய அடமானம் வெச்சு ஸ்கூல் பீஸ் கட்டிட்டாரு. அப்டியே கொஞ்ச நாள்ள நகைய மீட்டும் கொடுத்திட்டாரு. பசஙக இப்ப காலேஜ் போறாங்க.

     சரி, பசஙக இன்னும் மூனு வருசத்தில வேலைக்கு போயி கைநிறைய சம்பாதிச்சு கொடுத்திடுவானுங்க. இதுதான சரியான சந்தர்ப்பம் சொந்தமா ஒரு வீடு வாங்கனும்ன்னு தன்னோட பலநாள் கனவ நினைவாக்க, பேங்க் பேங்க்கா அலைஞசு, கடைசில குறைந்த வட்டியில ஹோம்லோன் வாங்கி பார்த்து பார்த்து வீட்ட கட்டினாருஙக.

   வீடும் வாங்கியாச்சு, கூடவே காரும் வாங்கியாச்சு எல்லாமே ஈசி ஈ.எம்.ஐ லோன்ல வாங்கி குவிச்சாச்சு.

  பசஙக படிப்பு முடிச்சதும் வேலைகிடைக்குதோ இல்லையோ அவசர அவசரமா லோனோட ஈ.எம்.ஐ. கடன தவறாம செலுத்தனுமேன்னு லோ..லோந்னு குடும்பமே ஓடி ஆடி உழைச்சது. பசஙக காலேஜ் முடிச்சதும் கல்யாணம் பன்னிவெக்கனுமே??

எம்மாஆஆடி.... சங்கரா!!! நீ கிரேட்ப்பா

    இப்படி வாழ்க்கை முழுக்க உழைச்சு உழைச்சு பணத்தை சம்பாதிச்சு லோன் வாங்கி உங்க மகிழ்ச்சியை தேடி அழையனுமா? இல்ல, நான் சொல்லுற வழிய கடைபிடிச்சு கெத்தா சொத்தோட வாழ்க்கைய வாழனுமா??

    சாய்ஸ் உங்க கையிலதான். அற்புத விளக்க தேய்க்க நீங்க ரெடியா இருந்தீஙகன்னா அந்த அலாவுதீன் பூதத்தை நான் உங்களுக்கு வரவைச்சு தருகிறேன்.

   இது உங்கள் வாழ்க்கையை மாற்ற போகும் ஒரு அற்புத தருணம்.

 யோசிக்காதீங்க,உங்க கையில் இருக்குற பணத்துல கொஞ்சத்த பொட்டியில பத்தரமா வைச்சுடுங்க. பணம், குட்டி போட போகுது.!!!

இது, இன்சூரன்ஸ் - தெரிந்த செய்தியும் தெரியாத தகவல்களும்.

தொடருவோம்

Comments