புத்துயிர் பெறும் வெள்ளோடு பறவைகள் சரணாலயம்

புத்துயிர் பெறும் வெள்ளோடு சரணாலயம்: நடப்பு சீசனுக்கு 30,000 பறவைகள் எதிர்பார்ப்பு

    சென்னிமலை யூனியன், வெள்ளோடு அடுத்துள்ள வி.மேட்டுப்பாளையத்தில், வெள்ளோடு பறவைகள் சரணாலயம் உள்ளது. இங்குள்ள ஏரி, 215 ஏக்கர் பரப்பை கொண்டது. இங்கு ஒவ்வோர் ஆண்டும், செப்., மாதம் முதல் பிப்., மாதம் வரை, பறவைகளுக்கான சீசன் தொடங்கும். இந்த காலங்களில், பல்வேறு வெளிநாட்டு பறவைகள் இங்கு வந்து செல்லும். இவற்றை ரசிக்க, சுற்றுலா பயணிகளும் வந்து சென்றனர். சில ஆண்டாக கடும் வறட்சி மற்றும் எல்.பி.பி., வாய்க்காலில் தண்ணீர் விடாதது ஆகியவற்றால், சரணாலய ஏரி வறண்டது. இதனால் பறவைகள் வருகையும் குறைந்தன. தற்போது எல்.பி.பி., வாய்க்காலில் தண்ணீர் செல்கிறது. மேலும் தொடர் மழையால், சரணாலய ஏரியில் தண்ணீர் தேங்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் வனத்துறை சார்பில், புத்துயிர் கொடுக்கும் வகையில், கருங்கல் தடுப்பு சுவர் கட்டுதல், மண் கரை அமைத்தல், சிறிய பாலம் கட்டும் பணி, சில இடங்களில் தூர்வாரும் பணி உள்பட, நான்கு கோடியே, 90 லட்சம் ரூபாய் மதிப்பில், புனரமைப்பு பணி நடந்து வருகிறது. இந்நிலையில் இடம் பெயர்ந்த உள்நாட்டு பறவைகள், சரணாலயத்துக்கு வரத் தொடங்கி உள்ளன. இன்னும், 15 நாட்களில் இனப்பெருக்க சீசன் நெருங்குவதால், பெலிகான், கொசு உள்ளான், வண்ணான் நாரை, கூழைக்கெடா, பெரிய நீர் காகம், பாம்பு தாரா, சாம்பல் நாரை, வெண் மார்பு மீன் கொத்தி, ஜெம்பு கோரி, உள்ளிட்ட பறவைகளின் வருகை தொடங்கியுள்ளது. இதில் கூழைக்கெடா, ஆஸ்திரேலியாவில் இருந்தும், கொசு உல்லான் சைபீரியாவில் இருந்தும் வருகிறது. இந்நிலையில் சுற்றுலா பயணிகளை கவர, ஏரியில் படகு போக்குவரத்து தொடங்க, வனத்துறை அதிகாரிகள் முயற்சி எடுத்து வருகின்றனர்.
     14/7/19 அன்று வெள்ளோடு பறவைகள் சரணாலயம் விஜயம் செய்தேன். தமிழ் நாடு வனத்துறை அதிகாரிகள் அவர்களது சிறந்த உழைப்பின் மூலம் வெள்ளோடு பறவைகள் சரணாலயம் இப்பொழுது சிறப்பாக உள்ளது. ஏரியை தூர் வாரி, கரைகளை பன்மடங்கு பலப்படுத்தி இருப்பது மிகவும் சிறந்த பணி.தமிழ்நாடு ழுமுவதும் நீர் பற்றாக்குறை இருக்கும் இச்சமயம் வெள்ளோடு ஏரியில் நீர் இப்பொழுது பறவைகளுக்கு போதுமான அளவில் இருப்பதை கண்டு ஒரு Bird Photographer என்ற வகையில் எல்லாயில்லா ஆனந்தம் அடைந்தேன். என்னை விட ஆனந்தம் அடைவது அங்கே நூற்றுகணக்கில் வாழ்ந்து, இனப்பெருக்கம் செய்து கொண்டிருக்கும் Indian Spot bill Duck and Eurasian Coot பறவைகள்.....இந்த இரு இன பறவைகளை (சுமார் 500 எண்ணிக்கை) இந்த அளவு அதிக எண்ணிக்கையில் நான் பார்ப்பது இதுவே முதல் முறை.
     மேலும் சுமார் 120 நிமிடங்கள் ஏரி கரையில் சுற்றி நடந்த பொழுது கீழ் கண்ட 50 இன பறவைகளை என்னால் கண்டு ரசிக்க முடிந்தது. இவற்றில் நான் பார்க்காமல் தவறவிட்டது சுமார் 20 இன பறவைகள் கண்டிப்பாக இருந்திருக்கும். சுமார் 70 இன பறவைகளை ஒரே இடத்தில் வறட்சியான பருவத்தில் காணப்பட்டது வனத்துறையின் ஒப்பற்ற உழைப்பினால் மட்டுமே சாத்தியம்.
  தமிழக அரசு மற்றும் வனத்துறை உயர்அதிகாரிகள் அவர்களின் வழிகாட்டிதல் மூலம் ஈரோடு வனத்துறை செய்து முடித்துள்ள இந்த அரிய பணி ஆயிரகணக்கான பறவைகள், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் புகைபட கலைஞர்கள் சார்பில் இருகரம் கூப்பி வாழ்த்தி வணங்குகிறோம்.
       நான் பார்த்து ரசித்த பறவை இனங்கள் அனைத்தும் இந்திய பறவைகள் தான் என்றாலும் மிக குறைந்த நேரத்தில் சுமார் 50 பறவைகள் இனத்தை காண முடிந்தது ஆச்சரியமான ஒன்று தான். நீங்களும் சென்று பறவைகளை கண்டு களித்து வனத்துறையின் சாதனையை பாராட்டுக்கள். நான் கண்டு ரசித்த பறவை இனங்களில். சில உங்கள் பார்வைக்கு,
1.Black Drongo
2.Brahminy Starling
3.Red-vented Bulbul
4.Darter
5.Indian Spot-billed Duck
6.Baya Weaver
7.Great Cormorant
8.Purple Swamphen
9.Lesser Whistling-duck
10.Jacobin Cuckoo
11.Blue-faced Malkoha
12.Southern Coucal
13.Eurasian Coot
14.Common Moorhen
15.Painted Stork
16.Great Egret
17.Little Egret
18.Brahminy Kite
19.Black-winged Stilt
20.Black-winged Kite
21.White-browed Wagtail
22.Indian Robin
23.Indian Roller
24. Common Tailorbird
25. Oriental Magpie Robin
26. Common Myna
27. Common Hoopoe
28. Ashy-crowned Sparrow Lark
29. Rose-ringed Parakeet
30. Purple-rumped Sunbird
31. Purple Sunbird
32. Little Ringed Plover
33. Glossy Ibis
34. Black-headed Ibis
35. Indian Peafowl
36. Scaly breasted Munia
37. Pied Bushchat
38. Ashy Woodswallow
39. Coppersmith Barbet
40. White-throated Kingfisher
41. Indian Pond Heron
42. Asian Koel
43. Jerdon’s Bushlark
44. Green Bee-eater
45. Little Cormorant
46. Grey Heron
47. Spotted Dove
48. Eurasian Collered Dove
49. Tricoloured Munia
50. Black-crowned Night Heron


Comments