கொரானா - முடிவல்ல ஆரம்பம். உளவியல் பிரச்சனைகளை சரிசெய்வோம்

பான் கார்டு அப்ளிகேஷன் கூட முழுமையாக நிரப்பத்தெரியாத பலரும் அரசின் நடவடிக்கைகள் குறித்து விமர்சனம் செய்கிறார்கள். ஒரு நீண்ட போருக்கு தயாராகுங்கள் என்று பிரதமர் சொல்வதிலிருந்தே நிலமையின் தீவிரம் வரும் காலத்தில் எப்படி போக போகிறது என்பதை எதிர்கட்சிகளும், நற்சிந்தனையளர்களும் புரிந்துகொண்டு  இச்சூழ்நிலையில் அரசோடு தோளுக்கு தோள்கொடுத்து உதவ வேண்டும்.

மாறாக, மக்களின் மனதில் அரசுவிரோத பாங்கை விதைத்து ஓட்டு அறுவடை செய்யலாம் என்று எண்ணினால் #கொரானா இறப்பை காட்டிலும் பசிபிணியிலும், கலவரத்திலும் அதிக உயிர்களை இழக்க நேரிடும்.

உங்கள் ஊரின் தலைவனாக நீங்களே மாறுங்கள். பசியால் ஒரு உயிரும் வாடாதிருக்க அவர்களின் தரவுகளை சேகரியுங்கள். மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள். மற்றதை அரசு கவனித்துகொள்ளும்.

கடும் பஞ்சத்தையும், பொருளாதார சுமையையும் ஒவ்வொருவரும் சந்திக்க இருக்கிறோம். முடிந்த அளவு உயிருடன் இருக்க வேண்டும் என்றால் #கொரானா அரக்கனை முதலில் அழிக்க வேண்டும்.

இழக்கும் ஒவ்வொரு மருத்துவர்/செவிலியர்/சுகாதாரபணியாளர் உயிரும் 1 லட்சம் அப்பாவி மக்களின் உயிர்களுக்கு சமம். #தன் உயிர் பிரியக்கூடும் என்று தெரிந்தும் பணியில் இருக்கும் அவர்களை தெய்வத்தை விட மேலாதனாக வைக்க வேண்டும். இதில் அல்லாவும், அய்யப்பனும் அன்பின் வடிவான கர்த்தாவும் கூட விதி விலக்கல்ல... வீண் மதபிரச்சாரங்களை தவிருங்கள்.

வீடுகளிலும் வீதிகளிலும் அன்பு மலர்கிறது. காடுகளில் விலங்குகளும் பறவைகளும் விடுதலையடைந்திருக்கின்றன.


இப்போதைய சவால்,
உளவியல் ரீதியான பிரச்சனைகளை தீர்ப்பதும், பசிப்பிணி போக்குவதும், கொரானாவை அழிப்பதுவுமே ஆகும். விடுத்து, GTP, சென்செக்ஸ் குறைகிறது என்று அறிவாற்றலை காண்பிக்காதீர்கள். அது இன்னமும் எதிர்காலம் குறித்த பயத்தை அப்பாவி மக்களின் இதயத்தில் ஏற்படுத்தும்.

எப்போதும் போல ஊடகங்கள் நம்பர் ஒன் நிலைமையை தக்க வைக்க பொய்யோ/மெய்யோ பேசி வருகிறது. அதை தவிர்த்துவிடுவது நல்லது.

ஒரு உள்ளாட்சி தேர்தலுக்கு எப்படி திட்டமிடுவோமோ அதுபோலா வார்டு வாரியாக தரவுகளை சேமியுங்கள்.
நாம் வாழும் உலகில் வசதிபடைத்தோரில் நல்ல உள்ளங்கள் பலரும் உண்டு. ஒரு உயிரும் வாடாதிருக்க துணை செய்வோம்.

யாரேனும் கள்ளத்தனமாக மது விற்பனை செய்தால் தேசவிரோத குற்றம் போல பாவித்து கல்லெறியுங்கள். மதுவும் இந்த கொராவுடன் சேர்ந்தழியட்டும்.

"தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்."

பள்ளி ஆசிரியர்கள் தினமும் படியுங்கள். உங்களிடம் படிக்கும் பிள்ளைகளை தொடர்புகொண்டு பாடபுத்தகங்களில் இல்லாத வாழ்க்கை பாடத்தை இப்போதாவது சொல்லி கொடுங்கள். ஆன்லைன் அப்ளிகேசன்ஸ் நிறைய இருக்கிறது, பயன்படுத்துங்கள்.

மனைவியியை பாராட்டுங்கள், கனவனின் தியாகத்தை புரிந்துகொள்ளுங்கள், பெற்றோரை வழிநடத்துங்கள், குழந்தைகளை பாதுகாப்பாக நடத்துங்கள்.

எதுவும் முடியப்போவதில்லை. ஓட்டை உடைத்து வெளிவரும் பருந்து போல மீண்டும் இந்த வானத்தையும் ஆழ்கடலையும் நாமே ஆளப்போகிறோம். ஒற்றுமையை விட உயர்ந்த சக்தி எதுவுமில்லை என்று இந்த பிரபஞ்சத்திற்கு பூமியில் இருந்து புரியவைப்போம். மீண்டு வருவோம், ஜெய்ஹிந்த். என் தமிழே என் நம்பிக்கை. வாழ்க தமிழ்!!!

#தொழிகளம்_அருணேஸ்

Comments