Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

தொழில் பழகு தொடர்பதிவு 2

ஒரு நல்ல வாடிக்கையாளரை அடைய நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதில் கூறப்பட்டிருக்கும். அதற்கு நான் கேரண்டி.


வெறும் 150 ரூபாயில் தொடங்கி 200கோடி வருமானம் ஈட்டும் வெற்றிகதைகளை தெரிஞ்சுகனுமா? தடால் புடால்ன்னு நாடு முழுவதும் விளம்பரம் செஞ்சுட்டு மூன்றே மாதத்தில் காணமல் போன கம்பெனியை பற்றிய காரணத்தை புரிஞ்சுக்கனுமா? எல்லாமே அவர்கள் கையாண்ட சிறு யுக்திகளால் மட்டுமே நடந்தது. ஒரு வெற்றிகரமான தொழில்முனைவோனாக மாறனுமா? அடிப்படையான இந்த ஐந்து விசயங்களை மறந்துடாதிங்க…


#1. தனித்துவத்தை தக்கவையுங்கள்

#2. கஸ்டமரை கண்டுபிடியுங்கள்

#3. மக்கள் தொடர்பில் மாட்டிக்கொள்ளாதீர்கள்

#4. DD-யில் சிக்கி விடாதீர்கள்

#5. விரிவாக்கத்தை விட்டுவிடாதீர்கள்


விரிவாக பார்ப்போம்

#1. தனித்துவத்தை தக்கவையுங்கள்


சோப்பு என்றாலே உங்களுக்கு சட்டென்று நினைவுக்கு வரும் பிராண்ட் எது?? திடீர்ன்னு எதுவும் சொல்ல முடியவில்லையா? சரி, ஆயுர்வேத குளியல் சோப்பு என்றால் நினைவுக்கு வருவது எது என்றால் சட்டென்று "மெடிமிக்ஸ்"ந்னு சொல்ல முடிகிறதல்லவா??


இதே போல் ஹாஸ்பிடல் என்றால் நினைவுக்கு வருவது எது? அதுவே ஐ கேர் ஹாஸ்பிடல் என்றால் வாசன் ஐகேர் என்று ஈஸியா சொல்ல முடிகிறதா? 


சூப்பர் ஸ்டாரிலிருந்து சுப்ரீம் பேரடைஸ் வரை தங்களுக்கென தனி ஸ்டைல் ஒன்றை உருவாக்கி அதில் பெரும் சாம்ராச்சியங்களை கட்டமைத்த பல்வேறு நிறுவனங்களை பற்றியும், அவர்கள் எங்கு தப்பினார்கள் எதில் மாட்டி வீழ்ந்தார்கள் என்பதை பற்றியும் அறிந்துகொள்வோம். 


நாம் ஒரு வெற்றிகரமான வணிகராய் மாறனும்னா வெற்றி பெற்றவர்களின் கதைகளை மட்டும் தேடி தேடி படிச்சா போதாது. தோல்விகளால் துவண்டு போனவர்களையும் அவர்கள் ஏன் விழுந்தார்கள் என்பதையும் அலாசி ஆராய வேண்டும். உங்கள் தயாரிப்பு அல்லது சேவைக்கென்று ஒரு தனித்துவத்தை உருவாக்குவது எப்படி? அதன் முக்கியத்துவம் என்ன? ஏற்கனவே சந்தையில் இருக்கும் உங்கள் நிறுவனத்திற்கு  ஏற்படுத்த முடியுமா? அல்லது அதை கண்டுபிடிப்பது எப்படி? என்ற பல கேள்விகளுக்கும் விடைகளை தேடிச்செல்வோம் வாங்க…



நமக்கென்று ஒரு தனித்துவத்தை உருவாக்குவது என்பது தரத்தை, சேவையை அல்லது பயன்பாட்டை அடிப்படையாக கொண்டு கட்டமைக்கப்படுகிறது. வணிக சந்தையில் நாம் நுழையும் போது புதிதாய் ஒரு தொழில் வாய்ப்பை உருவாக்குவது அல்லது ஏற்கனவே புழக்கத்தில் இருப்பவர்களில் நம்மை தனித்து அடையாளப்படுத்தும் ஸ்பெசல் ஐட்டம் என்ன என்பதை தெளிவாக வெளிபடுத்த வேண்டும். மாறாக, பத்தோடு பதினொன்னா நுழைஞ்சீங்கன்னா போட்ட காசு வீடு திரும்புமா என்பதை யோசித்துகொள்ளுங்கள்.


காது குடையுற பட்ஸ்ல இருந்து காஸ்ட்லி கார் வரை எதுவா இருந்தாலும் தனக்கென ஒரு தனித்துவத்தை உருவாக்கி வைக்கலைனா ஆடி காத்து அடிச்சுட்டு போயிடும் பார்த்துகங்க…


எடுத்துக்கோ எடுத்துக்கோ அண்ணாச்சி கடைல எடுத்துக்க… 

தீ மூட்டி பாசம் கொட்டி சமைச்சது திண்டுக்கல்லு….

உறவுகள் மேம்பட சல்யூட் ராம்ராஜுக்கு சல்யூட்…

நீ எஞ்சினியரிங் தானே படிச்சே, டாக்டர் இல்லையே???


இந்த விளம்பரங்கள் எல்லாம் எந்த எந்த நிறுவனத்தோடதுன்னு நான் சொல்லாமலேயே உங்களுக்கு புரிஞ்சிருக்க தானே?? 


இங்க நாம கவனிக்க வேண்டியது மக்கள் மனதில் நம் தயாரிப்பு குறித்தான எத்தகைய எண்ணத்தை விதைக்கிறோம் என்பதை குறித்தாக இருக்க வேண்டும்.


ஒரு புதிய பிராண்ட மார்கெட்டில் நுழைக்கும் போது ஏற்கனவே அதே துறையில் முன்னனியில் யாரேனும் இருக்கிறார்களா அல்லது நாம் தான் முதலாவது நபரா என்பதெல்லாம் ஒரு விசயமே இல்லை. நாம, நம்மல பத்தி சொல்லும் போது வாடிக்கையாளர் அதை என்னவாக புரிந்துகொள்ள வேண்டும் என்பதை தெளிவா கிரிஸ்டல் கிளியரா பிக்ஸ் பன்னிக்கனும்.


 ஒரு பிராண்ட பொசிஷன் பன்னும் போது நம்முடைய தனித்தன்மையை அங்கே வாடிக்களையாளர்களுக்கு புரிய வைப்பதில் எந்த காம்ரமைசும் பன்னிக்காதீங்க. முதல் கோணல் முற்றிலும் கோணல் ஆயிடக்கூடாது அல்லவா?


வெண்மைனா ராம்ராஜ் காட்டன், பிரியாணினா திண்டுக்கல் தலைப்பாகட்டி என்பதெல்லாம் வெறும் பொசிசனிங்க் வேலை இல்லைங்க, மெய்யாலுமே அவங்க அவங்களுக்குன்னு தனி வழியை உருவாக்கி அதை தக்க வைத்துகொண்டவர்கள் ஆவார்கள்.

Post a Comment

0 Comments